azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Death is imagined by some as a terror-striking God riding a monster-buffalo, pouncing on you with a noose. No! The noose is your own making! He does not pounce; he gives advance notice of his arrival to take you - intimations like grey hair, falling teeth, failing vision, hearing deafness, shrinking skin, etc. He does not ride any beast; he is only another name for Time. It is Time that creeps steadily towards you and shears the cord of life. So utilise the capacity for action (karma) with which you are endowed, to liberate yourself. The Law of karma holds out hope for you; as the karma, so the consequence. Do not bind yourself further by seeking the fruit of action. Offer the act at the feet of God. Let it glorify Him. Be unconcerned with the success or failure of the endeavour. Then death will not bind you, but will come as a liberator! (Divine Discourse, Apr 14, 2001)
சிலர், மரணம் என்பது, ஒரு பூதாகரமான எருமை மாட்டில் ஏறிக்கொண்டு, உங்கள் கழுத்தில் ஒரு பாசக்கயிறை மாட்டப் பாய்ந்து வரும் ஒரு பயங்கரமான எமன் என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இல்லை ! இந்தப் பாசக் கயிறு, நீங்களே உங்களுக்குச் செய்து கொண்டதே ஆகும் ! அவன் உங்கள் மீது பாய்வதில்லை; அவன் உங்களைக் கொண்டு செல்ல வருவதைப் பற்றி முன் கூட்டியே, அதாவது, நரை முடி, விழும் பற்கள், குறையும் பார்வை, செவிட்டுத் தன்மை, சுருங்கும் தோல் போன்ற பலவற்றின் மூலம் அறிவிக்கிறான். அவன் எந்த மிருகத்தின் மீதும் அமர்ந்து வருவதில்லை; காலத்தின் மற்றொரு பெயரே அது. காலமே உங்களை நோக்கி, நிலையாக தவழ்ந்து வந்து, உயிரின் கயிற்றைத் துண்டித்து விடுகிறது. எனவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள திறனான கர்மாவைப் பயன்படுத்தி,உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள். கர்மா எனும் சட்டம், உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது; கர்மா எப்படியோ, விளைவும் அப்படியே. கர்ம பலனை வேண்டி, உங்களை நீங்களே மீண்டும் பிணைத்துக் கொள்ளாதீர்கள். உங்களது செயலை, இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து விடுங்கள். அது அவனுக்கே புகழ் சேர்க்கட்டும். முயற்சியின் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி அக்கறை அற்றவர்களாக இருங்கள். பின்னர், மரணம் என்பது உங்களைப் பிணைப்பதற்கு பதிலாக, விடுதலை அளிக்கும் ஒன்றாக அமையும் !