azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Animal qualities are fast increasing in man. Animals have a season and a reason but humans have none. Today humans have become worse than animals. Human qualities like compassion, kindness, love and forbearance are absent. One should be free from evil thoughts which are the root cause of worries. This requires abhyasa (constant and sustained practice). One can control the mind and attain peace by abhyasa. It is only in a peaceful mind that noble thoughts arise. The mind should be under one’s control. Master the mind and be a mastermind. Unfortunately, instead of controlling the mind, people have become slaves of their senses. That is the main cause of unsteadiness. Moreover, people have body attachment, which is the reason they get easily disturbed if people find fault with them. Why should one worry about the body when it is like a water bubble? You should get rid of body attachment. (Divine Discourse, May 26, 2001.)
மிருக குணங்கள் ,மனிதனுள் மிக வேகமாகப் பெருகிக் கொண்டே போகின்றன. மிருகங்களுக்காவது ஒரு காலம், நேரம் என்று இருக்கிறது, ஆனால் மனிதர்களுக்கு எதுவும் இல்லை. இன்று மனிதர்கள், மிருகங்களை விட மோசமாக, ஆகி விட்டார்கள். மனித குணங்களான, கருணை, கனிவு,ப்ரேமை மற்றும் சகிப்புத் தன்மை, ஆகியவை காணப்படவில்லை. ஒருவர் , அனைத்து கவலைகளுக்கும் மூல காரணமான, தீய குணங்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். இதற்கு, அப்யாஸ ( இடையறாத,முறையான பயிற்சி ) தேவை. ஒருவர், அப்யாஸத்தின் மூலம், மனதைக் கட்டுப்படுத்தி, சாந்தியை, பெற முடியும். சாந்தி நிறைந்த ஒரு மனதில் மட்டுமே, சீரிய எண்ணங்கள் எழும். மனம் ஒருவரது கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். மனதை வெல்லுங்கள், ஒரு மாமனிதராக ஆகுங்கள். துரதிருஷ்ட வசமாக, மனிதர்கள், மனதைக் கட்டுப் படுத்துவதற்கு பதிலாக, அவர்களின் புலன்களின் அடிமைகளாக ஆகி விட்டார்கள். அதுவே, சஞ்சலத்திற்கான முதன்மையான காரணமாகும். மேலும், மக்களுக்கு, உடல் பற்று இருக்கிறது; அதனால் தான், மற்றவர்கள் அவர்கள் மீது குறை கண்டு பிடித்தால், அவர்கள் எளிதாகக் கலக்கம் அடைந்து விடுகிறார்கள். ஒரு நீர்க்குமிழி போல இருக்கும் உடலுக்காக, ஏன் ஒருவர் கவலைப் பட வேண்டும் ? நீங்கள் உடல் பற்றை விட்டு விட வேண்டும்.