azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Seek the company of the good, the seekers, the aspirants, and the detached. Then you will see the light. Listen to holy discourses and read sacred books. Your effort and the atmosphere of the place - these two will lead you to success. Markandeya held tight the Shivalinga and so the noose of Yama (God of death) bound him and Shiva; hence young Markandeya was saved. The story teaches you to be ever in contact with God, for you do not know when the noose will be thrown. Attach yourself to the Highest, call it by any name, conceive it in any form. But, remember, without righteousness (Dharma) you cannot attain God. Learn the means of winning grace and earning purity from those who know - the elders and scholars who have put their learning into practice. Grace can wipe off the past; Sat-prayatna, Sat-sanga and Sadhachara (good effort, good company and good practices) will ensure happiness in future! (Divine Discourse, Apr 1, 1965.)
WIN THE GRACE OF THE LORD – AND ALL YOUR ACCUMULATED BURDEN WILL BE BURNT INTO ASHES IN JUST A MOMENT! - BABA
நல்லவர்கள், இறைவனை நாடுபவர்கள், ஆன்மீக சாதகர்கள் மற்றும் பற்றற்றவர்கள் ஆகியோரின் நட்பு வட்டத்தை நாடுங்கள். பின்னர், நீங்கள் ஆத்ம ஜோதியைக் காண்பீர்கள். புனிதமான உபன்யாசங்களைக் கேளுங்கள்; பவித்ரமான நூல்களைப் படியுங்கள். உங்களது முயற்சி மற்றும் அந்த இடத்தின் சூழ்நிலை- இந்த இரண்டும் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும். மார்க்கண்டேயன், சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான்; எனவே, யமனது பாசக்கயிறு, அவனையும், சிவனையும் சேர்த்துக் கட்டியது; எனவே தான், இளைஞனான மார்க்கண்டேயன் காப்பாற்றப் பட்டான். இந்தக் கதை, நீங்கள் எப்போதும் இறைவனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும் என போதிக்கிறது ; ஏனெனில், யமனது பாசக்கயிறு எப்போது நம்மைப் பிணைக்க வரும் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள், அதை எந்த நாமத்தினால் அழைத்தாலும், எப்படிப் பட்ட ரூபம் உடையது எனக் கற்பனை செய்தாலும், அந்த தலைசிறந்த ஒன்றுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தர்மம் இன்றி, நீங்கள் தெய்வத்தை அடைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறை அருளைப் பெறுவதற்கும், பரிசுத்தத்தை அடைவதற்குமான வழிகளை, தங்களது ஞானத்தை, நடைமுறையில் பயன்படுத்தி, அவற்றை அறிந்த, ஆன்றார்கள் மற்றும் சான்றோர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இறை அருளால் கடந்த காலத்தை அழிக்க முடியும்; ஸத் ப்ரயத்தனம், ஸத்ஸங்கம், மற்றும் ஸதாசாரம் ( நல் முயற்சி, நல்லோரின் நட்பு வட்டம் மற்றும் நன்னடத்தை ), ஆகியவை எதிர் காலத்தில் சந்தோஷத்தை உறுதி செய்யும் !
இறை அருளைப் பெற்று விடுங்கள்- குவித்து வைக்கப் பட்டுள்ள உங்களது அனைத்து பாவங்களும் கணப் பொழுதில் எரித்து சாம்பலாக்கப் பட்டு விடும்- பாபா