azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Apr 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The conquest of the ego is a hard task; years of persistent effort are needed to get success in this endeavour. Think of this example – Have you tried to break the coconut as soon as it comes from the coconut tree? The shell is covered compactly by a coat of fibre. You cannot break the nut by hitting even with a crowbar. Take off the fibrous armour, then breaking it is easy. When you take a coconut to be offered in the temple, you remove the fibre, and then offer it to God by breaking it into two halves. This is the symbol for destroying the ego and surrendering to the Lord. So also in life, you must remove the fibre of desire for sense-objects and then, go before the Lord devoid of desire and anger (kama and krodha); there you declare that you are egoless by breaking the coconut into two. You are then accepted! [Divine Discourse, Mar 29, 1965]
DESTROY YOUR EGO, YOU HAVE NO NEED TO SEEK LIBERATION. YOU WILL BE LIBERATION ITSELF. - BABA
அஹங்காரத்தை வெல்வது என்பது ஒரு கடினமான பணியே;இந்தப் பிரயத்தனத்தில் வெற்றி பெற , பல ஆண்டுகளிலான இடையறாத முயற்சி தேவை. இந்த உதாரணத்தை எண்ணிப் பாருங்கள்; தென்னை மரத்திலிருந்து வந்த உடனேயே அந்தத் தேங்காயை உடைக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? தேங்காயை ஒரு நாரின் மட்டை இறுக்கமாக மூடிக் கொண்டு இருக்கும். அந்தத் தேங்காயை, ஒரு கடப்பாரையைக் கொண்டு கூட உங்களால் உடைக்க முடியாது. அந்த மட்டையை எடுத்து விடுங்கள்,பிறகு அதை உடைப்பது மிகவும் சுலபம். நீங்கள் ஒரு தேங்காயை , கோவிலுக்கு அர்ப்பணிக்க எடுத்துச் செல்லும் போது, நீங்கள் நாரை உறித்து விட்டு,அதை இரண்டாக உடைத்து, இறைவனுக்கு நைவேத்யம் செய்கிறீர்கள். இதுவே, அஹங்காரத்தை அழித்து, இறைவனிடம் சரணாகதி அடைவதன் சின்னமாகும்.அதைப் போலவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும், புலனின்பப் பொருட்களின் மீதான ஆசை என்ற நாரை நீக்கி விட்டு, பின்னர், இறைவனின் முன், காமம் மற்றும் க்ரோதம் இன்றிச் செல்ல வேண்டும்.; அங்கு நீங்கள், தேங்காயை இரண்டாக உடைப்பதன் மூலம், அஹங்காரம் அற்றவர்கள் என்று அறிவிக்கிறீர்கள். நீங்கள் பின்னர் ஏற்றுக் கொள்ளப் படுகிறீர்கள் !
அஹங்காரத்தை அழித்து விடுங்கள்; நீங்கள் முக்தியை நாட வேண்டிய அவசியமில்லை. நீங்களே முக்தியாக ஆகி விடுவீர்கள் - பாபா