azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 31 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 31 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Jesus underwent several trials and tribulations during His time. He became the Saviour and Messiah of the poor and forlorn, helping them in many ways. Once while crossing the desert, a poor woman approached Him begging for food. He gave her bread saying, “Take this.” When someone enquired where bread came from, Jesus replied that it was Divine will. There is nothing greater than Divine Will. Everything is God’s will. The foremost duty of a human being is to realise the will of God and submit himself to that Divine will. People today are blind, having lost both their eyes of faith. Faith is the basis for all creation. Hence first and foremost, develop faith. Where there is faith and love, everything else will be added unto such a person. Many people have faith, but lack love. Faith devoid of love has no use. Love and faith must be together like mutually attractive magnetic poles. [Divine Discourse, Dec 26, 2007]
WHY FEAR WHEN I AM HERE? PUT ALL FAITH IN ME. I SHALL GUIDE YOU AND GUARD YOU,
LIKE THE EYELIDS GUARD THE EYE! - BABA
ஏசு கிருஸ்து, தனது வாழ்க்கையில் பல சோதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்தார். அவர், ஏழைகளுக்கும், நிராதரவானவர்களுக்கும், பல விதங்களில் உதவி புரிந்து, அவர்களின் ரக்ஷகராகவும், இறைத்தூதராகவும் இருந்தார். ஒரு முறை அவர் பாலைவனத்தைக் கடக்கும் போது, ஒரு ஏழை பெண் அவரிடம் வந்து, உணவு தருமாறு வேண்டினார். அவர் அவளுக்கு ஒரு ரொட்டியை அளித்து, ‘’ இதை எடுத்துக் கொள் ‘’ என்று கூறினார். அப்போது, இந்த ரொட்டி எங்கிருந்து வந்தது என்று யாரோ கேட்ட போது, இது தெய்வ ஸங்கல்பம் என்று ஏசு கிருஸ்து பதிலளித்தார். தெய்வ ஸங்கல்பத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அனைத்தும் தெய்வ ஸங்கல்பமே. ஒரு மனிதனின் தலையாய கடமை, தெய்வ ஸங்கல்பத்தை உணர்ந்து, தன்னை அதற்குப் பணியச் செய்து கொள்வதே ஆகும். மக்கள், தங்களது தெய்வ நம்பிக்கையின் இரண்டு கண்களையும் இழந்த குருடர்களாக இருக்கிறார்கள். சிருஷ்டி அனைத்தின் ஆதாரமும் தெய்வ நம்பிக்கையே, எனவே, முதன் முதலில், தெய்வ நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். எங்கு தெய்வ நம்பிக்கையும், ப்ரேமையும் இருக்கிறதோ, மற்றவை அனைத்தும் இப்படிப் பட்ட மனிதனுக்குக் கிடைத்து விடும். பலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது; ஆனால் ப்ரேமை இல்லை. ப்ரேமை அற்ற தெய்வ நம்பிக்கை வீணே. ப்ரேமையும், தெய்வ நம்பிக்கையும், ஒன்றை ஒன்று ஈர்க்கும் காந்தத்தின் இரு துருவங்களைப் போல , சேர்ந்து இருக்க வேண்டும்.
நான் இருக்க பயமேன்? உங்களது முழுநம்பிக்கையையும் என் மேல் வையுங்கள். நான் உங்களை வழி நடத்தி, கண் இமைகள் , கண்ணைக் காப்பது போல, காத்து ரக்ஷித்திடுவேன் - பாபா