azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! The story of Rama is not an ancient one. It is eternal and ever new. It is full of auspiciousness. When you contemplate on Rama incessantly, you derive great joy and delight! Ramayana teaches the principles of righteousness (dharma) and the path of duty to every individual. Ramayana sets an ideal to parents, brothers, and sisters in every family and to humanity! It is to understand and assimilate the principle of Ramayana that we are celebrating the festival of Rama Navami today. It is not enough if the celebration is confined to merely partaking of sweet pudding and other delicious items. May you fill your heart with the sacred ideals of the Ramayana! Obey the commands of Lord Rama. Pain and pleasure, sorrow and happiness follow one another. One should treat them with equanimity. May you give up hatred and all differences. May you live in peace and harmony! (Divine Discourse, Apr 11, 2003)
WHEN WE PRACTICE RIGHTEOUSNESS (DHARMA), THE DIVINITY IN US WILL
MANIFEST ITSELF SPONTANEOUSLY. - BABA
ப்ரேமையின் ஸ்வரூபங்களே! ஸ்ரீராமரன் கதை ஒரு புராதனமானதல்ல, அது நிரந்தரமானதும், நித்ய நூதனமானதும் ஆகும். அது முழுவதும் மங்களம் நிறைந்தது. நீங்கள் ஸ்ரீராமரை இடையறாது தியானித்தால், மிகுந்த சந்தோஷமும், குதூகலமும் அடைவீர்கள் ! ஸ்ரீமத் ராமாயணம் தர்மத்தின் கோட்பாடுகளையும், கடமையின் பாதையையும், ஒவ்வொரு மனிதனுக்கும் போதிக்கிறது. ஸ்ரீமத் ராமாயணம், ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும், மனித குலத்திற்குமே ஒரு இலட்சியத்தை நிலைநாட்டுகிறது. ஸ்ரீமத் ராமாயணத்தின் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டு, உட்கிரகித்துக் கொள்வதற்காகவே, நாம் இன்று ஸ்ரீராமநவமியைக் கொண்டாடுகிறோம். சர்க்கரைப் பொங்கல் மற்றும் இதர சுவையானவற்றை வெறுமனே உண்பதோடு மட்டும் இந்தக் கொண்டாட்டம் இருந்து விட்டால், அது போதுமானதல்ல. உங்களது இதயங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தின் புனிதமான இலட்சியங்களால் நிரம்பியிருக்கட்டும் ! பகவான் ஸ்ரீராமரின் கட்டளைகளுக்கு அடிபணியுங்கள். துன்பமும், இன்பமும், துக்கமும் , சுகமும் ஒன்றை ஒன்று தொடர்கின்றன. ஒருவர் இரண்டையும், சமச்சீராகக் கருத வேண்டும். த்வேஷம் மற்றும் அனைத்து வேற்றுமைகளையும், நீங்கள் விட்டு விடுவீர்களாக !நீங்கள் சாந்தி மற்றும் இசைவுடன் வாழ்வீர்களாக!
நாம் தர்மத்தைக் கடைப்பிடித்தால்,
நம்முள் உள்ள தெய்வீகம் தானாகவே வெளிப்படும் - பாபா