azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The ministers of Ravana spoke only what was pleasing to him; they were afraid and so, they proved dangerous counsellors. His brother Vibheeshana alone gave him the beneficial drug which would have cured him; but since it was not priya or pleasing, Ravana rejected it and fell into perdition. This is the message I bring - the Message that will confer strength, peace, hope and fulfilment. This message surely is hitha (beneficial), though it may not be priya (pleasing). A patient must take drugs and put himself through regimen that is beneficial; one cannot ask for only sweet medicines and comfortable regimen which please them. The doctor knows best and must be obeyed for the sake of recovery. The Vedas and scriptures are the greatest repositories of hitha, as they were won by penance and travail by sages and seers who were interested only in the welfare of humanity and the liberation of man. (Divine Discourse, Mar 16, 1966.)
THE DISEASE OF OVER ATTACHMENT TO WORLDLY OBJECTS CAN BE CURED ONLY BY THE DRUG OF ATTACHMENT TO GOD, CULTIVATED THROUGH JAPA AND DHYANA. - BABA
ராவணனுடைய மந்திரிகள், அவனுக்குப் பிடித்தவற்றை மட்டுமே பேசினார்கள்; அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர்;எனவே அவர்கள் அபாயகரமான ஆலோசகர்கள் என்பதை நிரூபித்தார்கள்.அவனுடைய தம்பியான விபீஷணன் மட்டுமே, அவனை குணப்படுத்த வல்ல மருந்தைத் தந்தான்; ஆனால் அது, பிடிக்காத ஒன்றாக இருந்ததால், ராவணன் அதை நிராகரித்து, அழிவிற்கு ஆளானான். நான் கொண்டு வரும் அறிவுரை இதுவே- இது வலிமை, சாந்தி, நம்பிக்கை மற்றும் பூரணத்துவத்தை அளிக்க வல்லது. இந்த அறிவுரை பிடித்தமானதாக ( ப்ரியம் ) இல்லாமல் இருக்கலாம்; ஆனால், கண்டிப்பாக பயனளிப்பதாக( ஹிதம் ) இருக்கும். ஒரு நோயாளி, மருந்துகளை எடுத்துக் கொண்டு, அதற்கான பயனளிக்க வல்ல பத்தியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்; ஒருவர் இனிப்பான மருந்துகள் , மற்றும் அவர்களுக்குப் பிடித்த, சௌகரியமான பத்தியம் தான் வேண்டும் எனக் கேட்க முடியாது. மருத்துவர் அவருக்கு நல்லது எது என்பதை அறிவார்; குணமடைவதற்கு, அதற்குக் கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும்.மனித குலத்தின் க்ஷேமம் மற்றும் மனித மோக்ஷத்தில் மட்டுமே அக்கறை கொண்டிருந்த, ரிஷி முனிவர்களால், கடுமையான தவம் மற்றும் முயற்சியின் மூலம் பெறப்பட்டதால், வேதங்களும், சாஸ்திரங்களும், நற்பயன் அளிக்கும் ஹிதத்தின், தலைசிறந்த பெட்டகங்கள் ஆகும்.
உலகியலானவற்றில் கொண்டிருக்கும் அபரிமிதமான பற்றுதல் என்ற வியாதியை, ஜபம் மற்றும் தியானத்தில் மூலம் வளர்த்துக் கொள்ளப் பட்ட இறைப் பற்றுதல் என்ற மருந்தால் தான் குணப்படுத்த முடியும்- பாபா