azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people keep the rosary revolving in their hands but their minds roam in the market. Can this be called japa (chanting)? While meditating, both your body and mind should be steady! The body is made of five elements, so it is bound to suffer. You should not be affected by it. This is true sadhana (spiritual exercise). All other sadhanas will prove futile if you do not give up body attachment. Today marks the beginning of a very sacred year. Not only in this year, but throughout your life, you should cultivate sacred thoughts. Embodiments of love, develop more and more love in you. Experience love and share it with others. You are not merely mortals. You are the sparks of divine. Lead your life in such a manner. This is the most important message for this New Year! When you understand and internalise your divine origin, your thoughts, words, and deeds will become sacred! (Divine Discourse, Apr 2, 2003)
சிலர், கையில் ஜபமாலையை உருட்டிக் கொண்டு இருப்பார்கள், ஆனால் அவர்களது மனம், கடைத்தெருவைச் சுற்றிக் கொண்டு இருக்கும். இதை ஜபம் என்று சொல்ல முடியுமா?தியானம் செய்யும் போது, மனம், உடல் என்ற இரண்டும் நிலையாக இருக்க வேண்டும் ! உடல் பஞ்ச பூதங்களால் ஆனது: எனவே அது துன்பத்திற்கு ஆளாகத் தான் செய்யும். நீங்கள் இதனால் பாதிக்கப் படக் கூடாது. அதுவே உண்மையான ஆன்மீக சாதனை. நீங்கள் உடல் பற்றுதலை விடவில்லை என்றால், மற்ற எல்லா ஆன்மீக சாதனைகளும் வீணே. இன்று ஒரு புனிதமான ஆண்டின் தொடக்கமாகும்.இந்த ஆண்டில் மட்டும் அல்ல, உங்கள் வாழ்நாள் முழுவதும், நீங்கள் புனிதமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ப்ரேமையின் ஸ்வரூபங்களே! உங்களுள் மேலும் மேலும் ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.ப்ரேமையை அனுபவித்து, அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வெறும் மனிதர்கள் மட்டுமே அல்ல. நீங்கள் தெய்வீகத்தின் ஒளிக்கீற்றுக்கள். உங்களது வாழ்க்கையை அதற்கு ஏற்றவாறு இட்டுச் செல்லுங்கள்.இதுவே , இந்த புத்தாண்டிற்கான மிகவும் முக்கியமான அறிவுரையாகும் ! உங்களது தெய்வீக அடிப்படையைப் புரிந்து கொண்டு அதை உள் வாங்கிக் கொண்டால், உங்களது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் புனிதமானவையாகி விடும் !