azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Bharatiya Culture is the very basis of human progress. It will uplift humanity by promoting brotherhood, upholding righteousness, and saturating every thought, word and act with reverence and humility. This culture will stand unshaken so long as the Ganga flows; no attempt to suppress or destroy it can succeed. The history and traditions of Bharat are as pure, holy, sanctifying, curative and precious as the Ganges. The origins of both are cool, comforting, and spotless snows! When young men and women are not trained to live a good and godly life, teaching them various skills and tricks, only makes them a danger to themselves and to others. The habit of prayer will inculcate courage and confidence; it will provide the student with a vast new source of energy. Every effort must be made to introduce the students to the sweet experiences of meditation and Yoga, or to the joy of inquiry into one's own reality! (Divine Discourse, May 13, 1970)
ONE'S NATION AND CULTURE SHOULD BE REVERED AS ONE'S PARENTS.
THE NATION IS ONE'S MOTHER. ONE'S CULTURE IS THE FATHER. - BABA
மனித குல முன்னேற்றத்தின் அடிப்படை ஆதாரம், பாரத கலாசாரமே. சகோதரத்துவத்தை வளர்த்து, தர்மத்தை நிலைநாட்டி, ஒவ்வொரு சிந்தனை, சொல், மற்றும் செயலையும், பயபக்தி மற்றும் பக்தியில் தோய்ந்திருக்குமாறு செய்து, அது, மனித குலத்தை உயர்த்தி விடுகிறது. கங்கை நதி ஓடிக் கொண்டிருக்கும் வரை, இந்த கலாசாரம் அசையாமல் நிலைத்திருக்கும்; இதை ஒடுக்கவோ அல்லது ஒழிக்கவோ செய்யப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது. பாரத நாட்டின் வரலாறும் பாரம்பரியங்களும், கங்கையைப் போன்று, தூய்மையானவை, பவித்ரமானவை, புனிதப்படுத்துபவை, குணப்படுத்துபவை, விலைமதிப்பற்றவை. இந்த இரண்டின் மூலாதாரமும், குளிர்ந்த, ஆறுதல் அளிக்கும் களங்கமற்ற பனிக்கட்டிகளே ! இளைஞர்களுக்கும், இளம் பெண்டிருக்கும், ஒரு நல்ல மற்றும் இறைத்தன்மையுள்ள வாழ்க்கையை நடத்த பயிற்சி அளிக்கப் படாமல், அவர்களுக்கு பல திறன்களையும், குயுக்திகளையும், கற்றுத் தருவது, தங்களுக்கும், பிறருக்கும், அவர்களை, ஒரு அபாயகரமானவர்களாக மட்டுமே ஆக்கி விடும். பிரார்த்தனை செய்யும் பழக்கம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை ஊட்டி, மாணவருக்கு ஏராளமான ஒரு புதிய சக்தியை அளித்து விடும். தியானம் மற்றும் யோகா அல்லது ஒருவர் தனது உண்மை நிலையைப் பற்றி ஆராய்வது ஆகியவற்றின் இனிய அனுபவத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப் பட வேண்டும் !
தேசத்தையும், அதன் கலாசாரத்தையும், ஒருவர் தனது பெற்றோரைப் போல மதிக்க வேண்டும். தேசமே தாய். கலாசாரமே தந்தை- பாபா