azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Mar 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

While in this transient world you have a sore need of someone of your kind to whom you can communicate your feelings, share your discoveries, depressions, moments of bliss and sorrow. Someone who can be by your side while trekking the hard road to truth and peace, encouraging and enthusing you towards the goal. Friends who can confer real counsel, comfort and consolation are precious gifts, rarely found today. Friendship must bind two hearts and affect both beneficially, whatever may happen to either - loss or gain, pain or pleasure. Each must correct the other, for each knows that they come from sympathy and love. Each must be vigilant that the other does not slide from the ideal, cultivate habits that are deleterious, or hide thoughts and plans that are evil. The honour of each is in the safekeeping of the other. Each trusts the other and places reliance on the other's watchful love. Only those deserve the name ‘friends’, who help in uplifting life, cleansing ideals, elevating emotions and strengthening resolves. [Divine Discourse, May 24, 1973]
MODERATE FOOD, MODERATE SLEEP, COMPASSION AND FORTITUDE - THESE WILL HELP IN THE UPKEEP OF THE HEALTH OF BOTH BODY AND MIND. - BABA
நிலையற்ற இந்த உலகில்,உங்களது உணர்வுகளைச் சொல்லிக் கொள்ளவும், உங்களது கண்டுபிடிப்புக்கள், மனத் தளர்ச்சிகள், ஆனந்தம் மற்றும் துக்கத்தின் தருணங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் , உங்களைப் போன்ற ஒருவர், உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறார்.சத்தியம் மற்றும் சாந்தியின் கடினமான பாதையில் நீங்கள் செல்லும் போது, அந்தக் குறிக்கோளை நோக்கிச் செல்ல, உங்களுக்கு தைரியமூட்டி, உற்சாகம் தர, உங்களுடன் இருக்கக் கூடியவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான அறிவுரை, ஆறுதல் மற்றும் பரிவை அளிக்கக் கூடிய அருமையான பரிசுகளான நண்பர்கள், இக்காலத்தில் அரிதாகக் காணப்படுகிறார்கள். நஷ்டமோ அல்லது லாபமோ, துன்பமோ அல்லது இன்பமோ, இருவருக்கும் எது நடந்தாலும், நட்பு என்பது இரண்டு இதயங்களை இணைத்து, இருவருக்கும் பயனளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் திருத்த வேண்டும்; ஏனெனில்,அவை பரிவு மற்றும் ப்ரேமையிலிருந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பதால். மற்றவர், இலட்சியத்திலிருந்து வழுவாமலும், தீமை பயக்கும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளாமலும் அல்லது கெட்ட சிந்தனை மற்றும் திட்டங்களை மறைக்காமலும் இருக்கிறாரா என்பதைக் கண்காணிப்பதில், ஒவ்வொருவரும், கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கௌரவமும், மற்றவரின் பாதுகாப்பில் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும், மற்றவரின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவரின் கண்காணிப்பான ப்ரேமையைச் சார்ந்திருப்பார். எவர் ஒருவர், வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவும், இலட்சியங்களைத் தூய்மைப் படுத்தவும், உணர்வுகளை மேம்படுத்தவும், ஸங்கல்பங்களுக்கு வலுவூட்டவும், உதவுகின்றாரோ, அவரே, ‘’ நண்பர்’’ என்ற பெயரால் அழைக்கத் தகுதி படைத்தவர் ஆவார்.
மிதமான உணவு, மிதமான உறக்கம்,கருணை மற்றும் மனோபலம்- இவை, உடல் மற்றும் மன நலனைப் பேணுவதில் உதவி புரியும் -பாபா