azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

All are God's children and are equally entitled to the love of the Lord. Why then are there differences amongst men and women? Why is there no equality or sameness? This is because of differences in the mental make-up of people. If the mind is impure, one's actions are bound to be impure. When the mind and the consciousness are warped by egoism, the human behaviour is also distorted. When these are turned towards the Divine, good actions follow naturally. Your mind is the cause of good and bad deeds. Hence, whatever you wish to achieve, you should try to accomplish without excitement or agitation. Wisdom or spiritual knowledge (Jnana) is regarded as the primary requisite for every human being. But what is truly primary is one’s conduct - righteous conduct. Your conduct determines your qualities and the qualities, in their turn, determine your behavior! (Divine Discourse, Apr 08, 1983)
REPUTATION IS MADE IN A MOMENT; CHARACTER IS BUILT IN A LIFETIME. - BABA
அனைவரும் இறைவனின் குழந்தைகளே; இறைவனது அன்பிற்கு அனைவரும் சம அளவு உரிமை உடையவர்களே.பின்னர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில், ஏன் வித்தியாசங்கள் உள்ளன? ஏன் சமத்துவம் அல்லது ஒரே மாதிரியான தன்மை இல்லை? மனிதர்களது மனப்பாங்கில் உள்ள வேற்றுமைகளே இதற்குக் காரணம். மனம் தூய்மையற்றதாக இருந்தால், ஒருவரது செயல்கள் தூய்மையற்றதாகவே இருக்கும்.மனமும், மனச்சாட்சியும், அஹங்காரத்தால் திரிந்திருந்தால், மனித நடத்தையும் கூட விகாரமாகி விடும். இவை இறைவனை நோக்கித் திரும்பும் போது, நற்செயல்கள், இயல்பாகவே பின்தொடரும். நல்ல அல்லது தீய செயல்களுக்கு உங்களது மனமே காரணம். எனவே, நீங்கள் எதைச் சாதிக்க விரும்பினாலும், அதை மனக்கிளர்ச்சி அல்லது கலக்கம் இன்றி சாதிக்க முயல வேண்டும். ஞானமே, ஒவ்வொரு மனிதனின் முன் முதல் தேவையாகக் கருதப் படுகிறது. ஆனால் உண்மையில் மிகவும் முதன்மையானது ஒருவரது நடத்தையே- தார்மீகமான நடத்தை. உங்கள் நடத்தை, உங்களது குணங்களை உறுதி செய்கிறது; உங்களது குணங்கள், பின்னர், உங்களது நடத்தையை முடிவு செய்கின்றன !
புகழை, ஒரு கண நேரத்தில் உருவாக்கி விடலாம்; நற்குணசீலங்களை நிலைநாட்ட ஒரு வாழ்நாள் பிடிக்கும் - பாபா