azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Almost every activity is motivated by self-interest. This concern for self-interest is opposed to the Divinity that is immanent in one. Without realising this Divinity, how can one achieve peace internally or in the world outside? There is no greater quality than selfless love, which expresses itself in service to others. Understand the relationship between karma and karma yoga properly. Ordinary action (karma) done with attachment or desires causes bondage. But desireless selfless action becomes karmayoga. Our life should become one of Divine Communion (yoga) rather than a roga (disease). Today most of our actions result in roga because we are attracted to sensuous pleasures. Freedom from this disease can be obtained by pursuing the spiritual path. The spiritual path is not merely singing bhajans or reciting hymns. These are merely good deeds. Only those actions which are performed as a complete offering to the Divine can be regarded as spiritual. (Divine Discourse, Apr 06, 1983)
SELFLESS LOVE IS THE SOURCE OF REAL BLISS. - BABA
அநேகமாக எல்லா செயல்களும். சுயநலத்தினாலேயே உந்தப் படுகின்றன. இந்த சுயநலத்தின் மீதுள்ள அக்கறை, ஒவ்வொருவருள்ளும் உறையும் தெய்வீகத்திற்குப் புறம்பானதே. இந்த தெய்வீகத்தை உணராமல், அக அல்லது புற உலகில் ஒருவர் எவ்வாறு சாந்தியை அடைய முடியும்?பிறருக்கு ஆற்றும் சேவையில் வெளிப்படும், தன்னலமற்ற ப்ரேமையை விட மேன்மையான குணம் எதுவும் இல்லை. கர்மாவிற்கும், கர்ம யோகத்திற்கும் உள்ள சம்பந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். பற்றுதல் அல்லது ஆசையுடன் ஆற்றப் படும் சாதாரண கர்மா, பந்தத்தை ஏற்படுத்துகிறது.ஆனால், ஆசையற்ற, தன்னலமற்ற செயல் கர்மயோகமாகிறது. நம்முடைய வாழ்க்கை, ரோகமாக ( வியாதி) இன்றி, யோகமாக இருக்க வேண்டும். இந்நாளில் , நமது பெரும்பாலான செயல்கள் ரோகத்தில் தான் முடிகின்றன; ஏனெனில், நாம் புலனின்பங்களால் ஈர்க்கப் படுகின்றோம்.ஆன்மீகப் பாதையைப் பின்பற்றுவதன் மூலம், இந்த ரோகத்திலிருந்து விடுதலை அடைய முடியும். ஆன்மீகப் பாதை என்பது வெறும் பஜனை பாடுவது அல்லது மந்திரங்களை ஓதுவது என்பது மட்டும் அல்ல. இவை வெறும் நற்கருமங்களே.எந்தச் செயல்கள் முழுமையாக இறையாற்பணமாகச் ஆற்றப்படுகின்றனவோ, அவையே ஆன்மீகமாகக் கருதப்படும்.
தன்னலமற்ற ப்ரேமையே, உண்மையான பேரானந்தத்தின் மூலாதாரம் - பாபா