azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The nature of man is a mixture of progressive and regressive characteristics. One must take note of this and foster the former, to the exclusion of the latter. The will to renounce, to share, and to give up, is a precious virtue. Curiosity, the longing to know, is another quality which must be used to know the Reality which appears as many and momentary. This knowledge can be attained only when the consciousness is purified by the grace of God. Holy days like Shivaratri are marked only to impress upon your mind your duty to impose a 'fast' on your senses and a 'vigil' on your intelligence, and to keep away from polluting impulses and inclinations. Even the thought that you have not benefited from the puja or japam (prayers and contemplation) you do should not pollute your faith. To adhere to spiritual practises is your duty, your innermost urge, and your genuine activity. Leave the rest to the will of God. This must be your resolve on holy Shivaratri. [Divine Discourse, Feb 29, 1984]
BE CLEAR AND CONTENT. BE MODERATE AND WISE. BE VIGILANT AND STEADY. BE EARNEST AND SWEET. - BABA
மனித இயல்பு, முன்னேற்றம் மற்றும் பின்னேற்றம் என்ற இரண்டு குணங்களின் ஒரு கலவையே. ஒருவர் இதைக் கவனித்து, பிந்தையதை ஒதுக்கி, முந்தையதைப் பேணிக் காக்க வேண்டும். தியாகம் செய்ய, பகிர்ந்து கொள்ள மற்றும் விட்டுக் கொடுப்பதற்கான மன உறுதி, ஒரு விலை மதிக்க முடியாத சீலமாகும். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மற்றொரு குணமான ஆர்வத்துடிப்பை, பலவாகவும், தாற்காலிகமானதாகவும் தோன்றும் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்குப் பயன் படுத்த வேண்டும். இறைவனது அருளால், அந்தராத்மாவைப் பரிசுத்திப் படுத்தினால் மட்டுமே, இந்த ஞானத்தைப் பெற முடியும். உங்களது புலன்களின் மீது ஒரு ‘’ உபவாசத்தையும்’’, உங்களது புத்தியின் மீது ஒரு ‘’விழிப்பையும்’’ சுமத்தி, களங்கப் படுத்தும் உந்துதல்கள் மற்றும் மனப்பாங்குகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற உங்களது கடமையை, உங்கள் மனதில் பதிப்பதற்காகவே, புனித நாட்களான ‘’ சிவராத்ரி’’ போன்றவை குறிப்பிடப் பட்டுள்ளன. நீங்கள் செய்யும் பூஜை மற்றும் ஜபத்தினால் நீங்கள் பயனடையவில்லை என்ற எண்ணம் கூட, உங்களது நம்பிக்கையை மாசு படுத்தக் கூடாது. ஆன்மீக சாதனைகளைக் கடைப்பிடிப்பது, உங்களது கடமையும், உங்களது உள்ளார்ந்த உந்நுதலும், உங்களது உண்மையான செயல்பாடும் ஆகும். மற்ற அனைத்தையும் இறைவனது ஸங்கல்பத்திற்கே விட்டு விடுங்கள். இதுவே, புனிதமான சிவராத்ரியில் உங்களது தீர்மானமாக இருக்க வேண்டும்.
தெளிர்ந்தவராக,திருப்தியானவராக,மிதமானவராக,புத்திசாலியாக, விழிப்புள்ளவராக,நிலையானவராக,ஆர்வமுள்ளவராக, இனிமையானவராக இருங்கள்- பாபா