azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

You are born in society, you grow in society, and earn name and fame in society. You learn many skills from the society and develop intelligence, and thereby you gain reputation for being intelligent. You received all these precious gifts from society. Have anyone of you, young men and women, thought of showing gratitude to the society from which you got the name and fame? What service are you rendering to the society in return for the good things received? How are you expressing your gratitude to society? Put these questions to yourself, and you get shallow answers. Ingratitude is incorrect. Every human being must possess the quality of gratitude. Being beneficiaries one must show gratitude. And as an expression of one’s gratitude, one should render selfless service to the society; it is one’s foremost duty.(Divine Discourse, Jul 16, 1997.)
நீங்கள், சமுதாயத்தில பிறந்து, அதில் வளர்ந்து, அதில், பெயரும் , புகழும் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் , சமுதாயத்திலிருந்து பல திறன்களைக் கற்றுக் கொண்டு, புத்தியை அபிவிருத்தி செய்து கொண்டு, அதன் மூலம், புத்தி கூர்மையானவர் என்ற மதிப்பைப் பெறுகிறீர்கள். நீங்கள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளை எல்லாம், சமுதாயத்திலிருந்து பெற்றுள்ளீர்கள். இளைஞர்களே, இளம் பெண்களே, உங்களில் யாராவது, எந்த சமுதாயத்திலிருந்து, நீங்கள் பெயரும், புகழும் பெற்றீர்களோ, அதற்கு ,நன்றி தெரிவிக்க வேண்டும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா ? நீங்கள் பெற்ற , நல்லவற்றிற்காக, நீங்கள் சமுதாயத்திற்கு என்ன சேவை ஆற்றி இருக்கிறீர்கள்? நீங்கள், இந்த சமுதாயத்திற்கு, எவ்வாறு உங்கள் நன்றியைத் தெரிவித்து இருக்கிறீர்கள் ? இந்தக் கேள்விகளை உங்களை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்; உங்களுக்கு, இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். நன்றியின்மை தவறானதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும், நன்றியுணர்வு இருக்க வேண்டும். பயனடைந்த ஒருவர், நன்றியை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும். தனது நன்றி உணர்வின் வெளிப்பாடாக, தன்னலமற்ற சேவையை ஒருவர், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டும்; இது ஒருவரது தலையாய கடமையாகும்.