azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is full of worries. They seem to come in an endless procession, isn’t it? When you worship God, make sure you repose total faith in Him. Without faith, what is the use of worship? Faith alone will take you beyond worries. What is it that does not cause anxiety? Birth is a worry, and so is existence itself; family life is a worry, death is a worry, childhood is a worry, old age is the same, living is a worry, working is a worry, pain causes worry, pleasure too causes worry, and so on. Worry, worry, worry all the time! In this world, troubles will come for sure but you must learn to rise above worry; this is possible only with forbearance (kshama). Welcome troubles with a smile saying, “Come my friend, you are the bearer of joy!” When you are filled with kshama, you will be blissful and achieve everything in life! (Divine Discourse, May 25, 2000.)
வாழ்க்கை, பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவை ,ஒரு முடிவே இல்லாத ஊர்வலம் போல வந்து கொண்டு இருப்பதைப் போலத் தோன்றுகிறது அல்லவா? நீங்கள் இறைவனை ஆராதிக்கும் போது, அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நம்பிக்கை இல்லை எனில், ஆராதனையினால் என்ன பயன்? நம்பிக்கை மட்டுமே உங்களை, கவலைக்கு அப்பால் இட்டுச் செல்லும். நமக்கு எதுதான் கவலை ஏற்படுத்தாமல் இருக்கிறது? பிறப்பு ஒரு கவலை, அதைப் போல இருப்பதே ஒரு கவலை; குடும்ப வாழ்க்கை ஒரு கவலை, இறப்பும் ஒரு கவலை, குழந்தைப் பருவம் ஒரு கவலை, முதுமையும் அதைப் போல ஒரு கவலையே, வாழ்க்கை ஒரு கவலை,வேலை செய்வது ஒரு கவலை, துன்பம் ஒரு கவலை, இன்பமும் கூட கவலையை ஏற்படுத்துகிறது, இத்யாதி இத்யாதி. கவலை, கவலை , கவலை எப்போதும் கவலை! இந்த உலகில் கஷ்டங்கள் கண்டிப்பாக வரும்; ஆனால், நீங்கள் அவைகளிலிருந்து மேல் எழக் கற்றுக் கொள்ள வேண்டும்; இது சகிப்புத் தன்மையினால் மட்டுமே சாத்தியமாகும். துன்பங்களை, ‘’ வா நண்பா வா! நீ தான் சந்தோஷங்களைக் கொண்டு வருபவன் ‘’ என புன்முறுவலோடு அழையுங்கள். நீங்கள் சகிப்புத் தன்மையால் நிறைந்திருந்தால், நீங்கள் ஆனந்தமாக இருப்பதோடு, வாழ்க்கையில் அனைத்தையும் சாதிப்பீர்கள் !