azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Presently people are not celebrating Sankranti in its true spirit. They confine it to mere performance of rituals, in the absence of purity and sanctity. In the past, of all the festivals, Sankranti was considered the most important. It is the day on which farmers bring home the harvested crop, feed the poor and rejoice. Vedic scholars get up during the early morning hours (Brahmamuhurta) and chant Vedic mantras, purifying the hearts of one and all. This festival also has a special significance for the householders. They invite their newly married son-in-law to their house, present them with new clothes and distribute sweets and rice puddings to all, thus the entire household abounds with joy. Cool winds, mellifluous bird songs and the sweet sugarcane crops herald the arrival of Sankranti. This festival bestows great joy and auspiciousness on farmers, householders, priests and children. It must drive away all disappointments and despair, and fill every heart with hope and enthusiasm. [Divine Discourse, Jan 12, 2004]
SPIRITUAL PROGRESS IS RIGHTEOUS LIVING, AND HAVING GOOD CONDUCT
AND MORAL BEHAVIOR AT ALL TIMES. - BABA
சங்கராந்தியை இந்நாளில், அதன் உண்மையான உணர்வோடு மக்கள் கொண்டாடுவதில்லை. பரிசுத்தமும், புனிதத்துவமும் இன்றி, அதை வெறும் சடங்குகளோடு முடித்து விடுகிறார்கள்.பண்டைய காலத்தில், அனைத்து பண்டிகைகளிலும் , சங்கராந்தியே மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அந்த நாளில், விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த தானியங்களை இல்லங்களுக்குக் கொண்டு வந்து, ஏழை எளியவர்களுக்கு உணவளித்து மகிழ்வார்கள். வேத பண்டிதர்கள் அதிகாலையில் ப்ரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து வேத மந்திரங்களை ஓதி, அனைவரது இதயங்களையும், தூய்மைப் படுத்துவார்கள். இந்தப் பண்டிகை க்ருஹஸ்தர்களுக்கும் ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டது. அவர்கள் புதிதாக மணம் ஆன மாப்பிள்ளைகளை இல்லங்களில் வரவேற்று, அவர்களுக்கு புத்தாடைகள் அளித்து, அனைவருக்கும் இனிப்புகளையும், பொங்கலையும் வழங்குவார்கள்; இவ்வாறு, இல்லம் முழுவதும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும். குளிர்ந்த காற்றும், இதமான பறவைகளின் கானமும், இனிமையான கரும்புப் பயிரும், சங்கராந்தியின் வரவை கட்டியம் கூறும். இந்தப் பண்டிகை விவசாயிகள், க்ருஹஸ்தர்கள், பண்டிதர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், மங்களத்தையும் அளிக்கிறது. அது அனைத்து ஏமாற்றங்கள் மற்றும் மனச்சோர்வை நீக்கி, ஒவ்வொரு இதயத்தையும், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தால் நிரப்ப வேண்டும்.
தார்மீகமான வாழ்க்கை,எல்லாக் காலங்களிலும் நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் இருப்பது ஆகியவையே ஆன்மீக முன்னேற்றமாகும் -பாபா