azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 07 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 07 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

It is by the stroke of supreme good fortune that you have come to the Lord. You must not let this opportunity slip. This is your chance to secure your physical, mental and spiritual well being. You have got this blessing, thanks to merit earned in some previous lives. It is not the fruit of this birth. Remember, there is no Dharma higher than Truth. Truth alone triumphs. Amongst all the attributes of God, Truth is foremost. God is hailed as Satya-vak-palakaya Namah (the Protector of Truth), the Propagator of Truth, and the Embodiment of Truth. Truth is God. Students! Youth is a crucial period in your lives. It is the stage in which your Divinity can blossom forth. It is the right time for you to strive to sublimate your speech and practice honoring your own words. Hence when you give your word once or take a pledge or make a promise, make every effort to fulfil it. (Divine Discourse, Jan 19, 1989.)
IT IS EASY TO SPEAK THE TRUTH. IT IS VERY DIFFICULT TO TELL A LIE AND SUSTAIN IT. - BABA
உங்களது மிகப் பெரிய அதிர்ஷ்டத்தினால் தான், நீங்கள் இறைவனிடம் வந்துள்ளீர்கள்.இந்த வாய்ப்பினை நீங்கள் நழுவ விட்டு விடக் கூடாது. இதுவே, நீங்கள், உடல், மனம் மற்றும் ஆன்மீக க்ஷேமத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாகும்.உங்களது முந்தைய சில பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தின் பலனாகவே, உங்களுக்கு இந்த ஆசி கிடைத்துள்ளது. இது, இந்தப் பிறவியின் பலனால் கிடைத்தது அல்ல. சத்தியத்தை விட உயர்ந்த தர்மம் வேறு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சத்தியமேவ ஜயதே, சத்தியம் மட்டுமே வெல்லும்.இறைவனது குணாதிசியங்களில் தலை சிறந்தது சத்தியமே. இறைவன் சத்ய வாக் பாலகாய நமஹ ( சத்தியத்தை ரக்ஷிப்பவன் ) எனப் படுகிறான். சத்தியத்தைப் பரப்புவனும், சத்தியத்தின் திருவருவமும் அவனே. சத்தியமே இறைவன். மாணவர்களே ! இளமை உங்களது வாழ்க்கையின் மிகவும் அதி முக்கியமான பருவம். உங்களது தெய்வீகம் விரிந்து மலரக் கூடிய ஒரு கால கட்டமாகும்.உங்களது பேச்சை சீரமைக்கப் பாடுபட்டு, உங்களது வார்த்தைகளை , நீங்களே மதித்து நடப்பதைப் பயிலுவதற்கான சரியான தருணமும் ஆகும். எனவே, நீங்கள் ஒரு முறை ஒரு வாக்கை அளித்து விட்டாலோ அல்லது ஒரு சபதம் எடுத்துக் கொண்டாலோ அல்லது ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டாலோ, அதைப் பூர்த்தி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளுங்கள்.
உண்மையைப் பேசுவது மிகவும் எளிது; பொய்யைப் பேசி, அதை நிலைநாட்டுவது மிகவும் கடினமே- பாபா