azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a newspaper; read casually a few columns and headlines that catch your fancy and throw it aside. Do not consider it any more important than that. Remember, today’s newspaper, is tomorrow’s 'waste paper'! So too, life is worth only a casual perusal! One birth is enough; let the death coming to you in this life be the last. You are all caskets of divine Love; share it and spread it. Express that Love in acts of service, words of sympathy, and thoughts of compassion. Just as when you wake up from sleep you know that the dream you had was a matter of minutes, even though the chain of events dreamt spanned many years, this life too will appear a transient affair when you awaken into jnana (supreme wisdom) after this brief 'dream of life’. Be always full of joy so that when death calls, you can quit with a light laugh, without whimpering in grief. I bless you to shape your life to attain that supreme everlasting bliss! (Divine Discourse, Jul 7, 1968)
THERE IS NO MORE DREADFUL DISEASE IN THE WORLD THAN INSATIABLE DESIRE! - BABA
வாழ்க்கை ஒரு செய்தித்தாள் போன்றது;உங்களது கவனத்தைக் கவரும் சில பதிப்புக்களையும், தலையங்கங்களையும் படித்து விட்டு, அதை வீசி எறிந்து விடுங்கள்.இதை விட முக்கியமானதாக, அதைக் கருதாதீர்கள். நினைவிருக்கட்டும் ! இன்றைய செய்தித்தாள், நாளைய குப்பைத்தாள் ! அதைப் போலவே, வாழ்க்கையும், ஒரு மேலோட்டமான கவனத்திற்குரியதே ! ஒரு ஜன்மம் போதும்; இந்த ஜன்மத்தில் வரும் இறப்பே, இறுதியானதாக இருக்கட்டும்.நீங்கள் அனைவரும் தெய்வீக ப்ரேமையின் பெட்டகங்கள்; அதைப் பகிர்ந்து கொண்டு, பரப்புங்கள். அந்த ப்ரேமையை, சேவைப் பணிகளிலும், பரிவான சொற்களிலும், பச்சாதாபமான சிந்தனைகளிலும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் கண்ட கனவில் நடந்த நிகழ்வுகள் பல ஆண்டுகளில் நடந்ததாகத் தோன்றினாலும், நீங்கள் கண் விழித்தவுடன், அந்தக் கனவு சில நிமிடங்களே நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதைப் போல, ஒரு சுருக்கமான வாழ்க்கை எனும் கனவிற்குப் பிறகு, நீங்கள் ஞானம் எனும் விழிப்புணர்வு பெற்றவுடன், இந்த வாழ்க்கையும், ஒரு நிலையற்ற, நிகழ்வாகவே தோன்றும். எப்போதும், சந்தோஷ மயமாகவே இருங்கள்; அப்போது தான் இறப்பு வரும் போது, துக்கத்தால் முனகாது, சிறு நகைப்புடன் நீங்கள் விலக முடியும். நீங்கள் பேரானந்தப் பெருநிலையை அடையும் வண்ணம், உங்களது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என நான் ஆசீர்வதிக்கிறேன் !
இந்த உலகில் , தணிக்க முடியாத ஆசையை விடக்
கொடிய நோய் வேறு எதுவும் இல்லை - பாபா