azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Do you like the voice of a crow? You drive the crow away when it starts to ‘caw’! Its voice is harsh and too loud! On the other hand, the cuckoo looks just like the crow, but everyone likes to hear its sweet voice, isn’t it? God blessed you with a tongue to express your thoughts, ideas, feelings, desires, prayers, joys and sorrows. If you are angry, you use it to speak out harsh words in a loud tone. When you are happy, you use it to speak soft words in a low and pleasant voice. I ask that you use your tongue only for your good and the good of others. If you speak harshly to another, they too respond loudly and harshly; angry words leads to more angry reactions. But if you use soft and sweet words when another is angry towards you, they will calm down and be sorry that they used their tongue in that way. So always speak softly and sweetly! (Divine Discourse, May 16, 1969)
DO NOT SHOUT, DO NOT TALK LONGER THAN NECESSARY, AND DO NOT TALK
WHEN THERE IS NO NEED TO TALK! - BABA
உங்களுக்குக் காக்கையின் குரல் பிடித்தா இருக்கிறது? காக்கை, ‘’ கா கா ‘’ என்றவுடனேயே, நீங்கள் அதை விரட்டி விடுகிறீர்கள் !அதன் குரல் ,கரகரப்பாகவும், உரத்த குரலாகவும் இருக்கிறது. அதே சமயம், குயில் காகத்தைப் போலவே இருக்கிறது, ஆனால், ஒவ்வொருவரும் அதன் இனிமையான குரலைக் கேட்க விரும்புகிறார்கள் இல்லையா? இறைவன், உங்களது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள், ஆசைகள், பிரார்த்தனைகள், சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களை எடுத்துரைப்பதற்காக உங்களுக்கு ஒரு நாக்கை, அளித்துள்ளான். நீங்கள் கோபப் படும்போது, அதை உரத்த குரலில் கடுமையான வார்த்தைகளைக் கூறுவதற்கு உபயோகிக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது, மிருதுவான வார்த்தைகளை, ஒரு தாழ்ந்த மற்றும் இனிமையான குரலில் பேசுவதற்கு, அதை உபயோகிக்கிறீர்கள். நீங்கள் உங்களது நாவை, உங்களது மற்றும் பிறரது நன்மைக்காக மட்டுமே உபயோகியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மற்றொருவருடன் கடுமையாகப் பேசினால், அவர்களும் உரத்த குரலில், கடுமையாக பதிலளிப்பார்கள்; ஆத்திரமான வார்த்தைகள், மேலும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு இட்டுச் செல்லும். ஆனால், மற்றொருவர் உங்களிடம் கோபமாக இருக்கும் போது, நீங்கள் இதமான மற்றும் இனிமையான வார்த்தைகளைப் பேசினால், அவர்களும் அமைதியாகி, தங்களது நாவை அப்படிப் பயன்படுத்தியதற்காக வருத்தப் படுவார்கள். எனவே, எப்போதும், இதமாகவும், இனிமையாகவும் பேசுங்கள் !
உரக்கப் பேசாதீர்கள், அளவுக்கு மீறிப் பேசாதீர்கள், அவசியம் இல்லாத போதும் பேசாதீர்கள் ! -பாபா