azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Jesus was supremely pure and sacred. To forget Jesus' teachings and to profess love for Him is no love at all. You must all remember: "God is One. Love is God. Live in Love." There is no use in merely invoking the name of Jesus and praying to Him without regard to His most vital message: "God is in everyone. Do not revile anyone. Do not cause harm to anyone." This was Jesus' greatest message. Jesus sacrificed his life to establish "Peace on earth and goodwill amongst all human beings”. Without peace, mankind cannot achieve progress in any sphere, be it material, spiritual or moral. What the world needs today is the redeeming and unifying force of love that Jesus gave - love which continually expands and embraces more and more people. Mankind should become one family. The world will then become a paradise. Hence today onwards, give up narrow ideas regarding your religion, nation, caste or creed, and develop a broad outlook. I wish you all happiness. (Divine Discourse, Dec 25, 1985)
ஏசு பிரான் தலைசிறந்த பரிசுத்தமும் மற்றும் பவித்ரமும் ஆனவர்.ஏசு பிரானின் போதனைகளை மறந்து விட்டு, அவர் மீது ப்ரேமை உள்ளதாகப் பறைசாற்றிக் கொள்வது ப்ரேமையே அல்ல.நீங்கள் அனைவரும் , ‘’ இறைவன் ஒருவனே. அன்பே இறைவன். அன்பில் வாழ வேண்டும் ‘’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.’’ இறைவன் ஒவ்வொருள்ளும் உள்ளான், எவரையும் தூற்றக் கூடாது, எவருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது’’ என்ற ஏசுபிரானின் மிக முக்கியமான போதனையை மதிக்காது, வெறுமனே அவரது நாமத்தை உச்சரித்து அவரை வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை. இதுவே, ஏசுபிரானின் தலை சிறந்த போதனையாகும்.‘’உலகில் சாந்தியையும், மனிதர் அனைவரிடத்தும் நல்லுணர்வையும் நிலைநாட்ட ,ஏசு பிரான் தனது உயிரையே தியாகம் செய்தார். உலகியல், ஆன்மீகம் அல்லது சீலத்தில், மனித குலம், சாந்தியின்றி எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது. ஏசு பிரான் அளித்த, பாவத்தில் இருந்து மீட்க வல்ல மற்றும் ஒன்றிணைக்க வல்ல ப்ரேமையே – அதாவது தொடர்ச்சியாக பரந்து விரிந்து, மேலும் மேலும் மக்களை அரவணைக்க வல்ல ப்ரேமையே- உலகின் இன்றைய தேவையாகும்.மனித குலம் ஒரே குடும்பமாக ஆக வேண்டும். பின்னர், உலகமே ஒரு சுவர்க்கம் ஆகி விடும். எனவே, இன்றிலிருந்து,மதம்,தேசம், குலம் அல்லது ஜாதி ஆகியவை பற்றிய உங்களது குறுகிய சிந்தனைகளை விடுத்து, ஒரு பரந்த மனப்பாங்கினை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். நீங்கள் அனைத்து ஆனந்தமும் பெற நான் வாழ்த்துகிறேன்.