azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Far more beneficial than honouring the great is the practice of loving them. Praise and eulogy will raise them to an unreachable pedestal. Love binds one heart to another. Gratitude for the inspiration and instruction received must bind hearts in love. Celebration of Christmas should not include some carols, tableaux, artificial trees and Santa Claus. It must be soaked in the resolution to practice at least a few lessons Jesus taught us. The very first need is faith in God and in our own Divine Nature. Spiritual joy, appreciation, and the vision (Darshan) of God must become the natural breath of life and the very purpose of your existence. Jesus taught by precept and example to mankind the Atmic principle which is the eternal source of bliss. Whatever you do, wherever you are, however you fare, be convinced that you are ever in God. Know that all is Divine and all acts are offerings to the glory of God. In this manner make your lives fruitful. (Divine Discourse, Dec 25, 1982
ஆன்றோர்களை மதிப்பதை விட,அவர்களை நேசிக்கும் பழக்கம் எவ்வளவோ பயனுள்ளதாகும். புகழ்ச்சியும், பாராட்டும், அவர்களை எட்ட முடியாத மேடையில் ஏற்றி விடும்.ப்ரேமையே ஒரு இதயத்தை, மற்றொரு இதயத்துடன் பிணைக்கிறது. பெற்ற உத்வேகம் மற்றும் அறிவுரைக்கான நன்றியணர்ச்சி, இதயங்களை ப்ரேமையால் இணைக்க வேண்டும். கிருஸ்துமஸ் பண்டிகை சில பக்திப் பாடல்கள், ஓவியங்கள், செயற்கை மரங்கள் மற்றும் சான்டா க்ளாஸ் ஆகியவற்றை மட்டுமே கொண்டதாக இருக்கக் கூடாது. ஏசு பிரான் நமக்குக் கற்பித்த போதனைகளில் ஒரு சிலவற்றையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஸங்கல்பத்தில், அது தோய்ந்திருக்க வேண்டும். இறைவன் மீதும், நமது சொந்த தெய்வீகத் தன்மையின் மீதும் கொள்ளும் நம்பிக்கையே முதற்கண் தேவையாகும்.ஆன்மீக ஆனந்தம், பரவசம், மற்றும் இறைவனது தரிசனம், உங்களது வாழ்க்கையின் இயற்கையான உயிர் மூச்சாகவும், நீங்கள் வாழ்வதன் நோக்கமாகவும் இருக்க வேண்டும். நிரந்தரமான ஆனந்தத்தின் மூல ஊற்றான ஆத்ம தத்துவத்தை, தனது நடத்தை மற்றும் உதாரணத்தின் மூலம் உலகிற்குப் போதித்தவர் ஏசு பிரான்.நீங்கள் எதைச் செய்தாலும், எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும், நீங்கள் என்றும் இறைவனுள் இருக்கிறீர்கள் என்பதை நம்புங்கள். அனைத்துமே தெய்வீகம் மற்றும் அனைத்து செயல்களும் இறைவனது மாட்சிமைக்கு அர்ப்பணிப்புக்களே என்பதை உணருங்கள். இவ்வாறு , உங்களது வாழ்க்கைகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.