azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Ideas of superiority and inferiority arise only in a heart corrupted by egoism. If someone argues that they are superior and their path to worship is holier, it is proof that they missed the very core of faith. Spiritual efforts (sadhana) must reveal the unity in all creation. Ask yourself this: When you rise after bhajans or meditation, do you see everyone in a clearer light, as endowed with Divinity? Do you love more, do you talk less, do you serve others more earnestly? These are the signs of success in Sadhana. Your progress must be authenticated by your character and behaviour. Even a boulder will, through the action of sun, rain, heat and cold, disintegrate into mud and become food for a tree. Sadhana must transmute your attitude towards beings and things; else it is a hoax, a waste of your time! Remember, even the hardest of hearts can be softened and Divine will sprout therein – so, do not give up! (Divine Discourse, Jan 13, 1969.)
BELIEVE THAT GOD RESIDES IN ALL BEINGS. SPEAK SUCH WORDS AS WOULD SPREAD GOODNESS, TRUTH AND BEAUTY. - BABA
அஹங்காரத்தால் சிதைந்து விட்ட ஒரு இதயத்தில் தான், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற கருத்துக்கள் எழும். யாராவது, அவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் அவர்களது வழிபாட்டு முறை தான் உயர்ந்தது என்றும் வாதிப்பார்களேயானால், அவர்கள் தங்களது மதத்தின் உட்கருத்தையே தவற விட்டு விட்டார்கள் என்பதே புலனாகிறது. ஆன்மீக சாதனை, அனைத்து சிருஷ்ட்டியிலும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். உங்களை, நீங்களே இதைக் கேட்டுக் கொள்ளுங்கள் – பஜனை அல்லது தியானத்திலிருந்து நீங்கள் எழும் போது, நீங்கள் ஒவ்வொருவரையும், தெய்வீகம் நிறைந்தவர்களாகத் தெளிவாகப் பார்க்கிறீர்களா?நீங்கள் அதிகமாக நேசித்து, குறைவாகப் பேசி, அதிக ஆத்மார்த்தமாக பிறருக்குச் சேவை செய்கிறீர்களா? இவையே ஆன்மீக சாதனையில் வெற்றியின் அறிகுறிகளாகும். உங்களது முன்னேற்றம், உங்களது குணநலன் மற்றும் நன்னடைத்தையால் அங்கீகரிக்கப் பட வேண்டும். ஒரு பாறை கூட, வெயில், மழை,வெப்பம் மற்றும் குளிர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தால், களி மண்ணாகக் கரைந்து ஒரு மரத்திற்கு உணவாக ஆகி விடுகிறது. ஆன்மீக சாதனை, ஜீவராசிகள் மற்றும் பொருட்களைக் குறித்த உங்களது மனப்பாங்கை, உயர் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்; இல்லை எனில் அது ஒரு ஏமாற்று வித்தையே, கால விரயமே! இரும்பான இதயங்களைக் கூட இளக வைக்க முடியும், அதில் தெய்வீகம் மலரும் என்பதை நினைவில் கொண்டு, முயற்சியை ஒரு போதும் கை விடாதீர்கள் !
இறைவன் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறான் என்பதை நம்புங்கள். சத்தியம், சிவம் மற்றும் சுந்தரத்தைப் பரப்பும் வார்த்தைகளையே பேசுங்கள் - பாபா