azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Many of you are yearning to get nectar (amrit) from Me. But of what benefit is it merely to swallow a few drops of nectar created by Me? It is when the satwik (pure) quality wins and subdues the rajasik and the tamasik (passionate and ignorant) qualities in the battles that go on in every heart, that amrit arises therein! This amrith that confers immortality must be won through your own spiritual practices (Sadhana). People practising meditation are taught an exercise called urdhva-drishti (upward vision) in which the two eyes are directed upwards, to a point between the eyebrows. Urdhva means upward and drishti means look, so the term means, not a mere physical exercise, but a lifetime of effort to direct your mind to avoid and abstain from lower desires, and to uplift itself to nobler thoughts. Such an effort will win amrit, it will flow from the spring of the heart! [Divine Discourse, Jan 11, 1968]
TRANSFORM WORK INTO WORSHIP AND WORSHIP INTO WISDOM. - BABA
உங்களில் பலர் என்னிடமிருந்து அம்ருதம் பெற வேண்டும் என ஏங்குகிறீர்கள். என்னால் சிருஷ்டிக்கப் படும் அம்ருதத்தின் சில துளிகளை வெறுமனே முழுங்குவதால் என்ன பயன்? ஒவ்வொரு இதயத்திலும் நிகழும் போராட்டங்களில்,ஸத்வ குணம் வெற்றி பெற்று, ரஜோ மற்றும் தமோ குணங்கள் அடக்கப் படும் போது தான், அங்கிருந்து அம்ருதம் உருவாகும் ! அமரத்துவத்தை அளிக்கும் அம்ருதத்தை, உங்களது சொந்த ஆன்மீக சாதனைகளின் மூலம் தான் பெற்றாக வேண்டும். தியானத்தைப் பயிலுபவர்களுக்கு, இரண்டு கண்களையும் மேல் நோக்கி, புருவங்களுக்கு இடையில் உள்ள மையத்தில் நோக்குமாறு செய்யும், ஊர்த்வ திருஷ்ட்டி என்ற பயிற்சி கற்பிக்கப் படுகிறது. ஊர்த்வ என்றால் மேல் நோக்கி, திருஷ்ட்டி என்றால் பார்வை; எனவே, வெறும் ஒரு பௌதீகமான பயிற்சியாக அல்லாமல், உங்கள் மனதிலிருந்து கீழ்த்தரமான ஆசைகளைத் தவிர்த்து, அவற்றை விலகி, அதனை சீரிய சிந்தனைகளுக்கு உயர்த்திடுமாறு பணிக்கும், வாழ்நாள் முழுவதுமான ஒரு பயிற்சி, என்பதே இந்த வார்த்தையின் பொருளாகும்.இப்படிப் பட்ட முயற்சியே,அம்ருதத்தைப் பெற்றுத் தரும்; அது இதயமெனும் ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் !
கர்மத்தை, பக்தியாகவும், பக்தியை ஞானமாகவும் மாற்றுங்கள்- பாபா