azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not demean your talents; when you dive deep into yourselves you can discover the source of all strength. Ants creeping over a huge rock, millions of them, can carve a deep groove along their path. The minute feet of the ant have that power. You might have seen on the walls around the village wells, deep holes produced on granite slabs by the continuous placing of water pots! The pots are made of mud, but over years they erase even the hardest granite! The embodiment of the Self (Atma-swarupa) that you are is not an embodiment of insignificance (alpa-swarupam)! The Atma is not anaemic. It is a powerful dynamo, capable of generating enormous power. Your spiritual teacher (Guru) shows you the goal (guri); but, you must generate the power yourself, by your own spiritual effort. (Divine Discourse, Nov 23, 1964.)
GOD ALONE IS THE GIVER OF LIFE, THE GUARDIAN OF LIFE AND THE GOAL OF LIFE. - BABA
உங்களது திறன்களை குறைவாக மதிப்பிடாதீர்கள்; உங்களுள்ளேயே ஆழ்ந்து தேடினீர்களானால், அனைத்து வல்லமையின் மூலாதாரத்தை நீங்கள் கண்டு பிடிக்க முடியும். ஒரு மிகப் பெரிய பாறாங்கல்லில் ஊர்ந்து செல்லும் லக்ஷக் கணக்கான எறும்புகள், அவர்களது பாதையில் ,ஒரு ஆழமான வழித்தடத்தை உருவாக்க முடியும். எறும்பின் சின்னஞ் சிறிய பாதங்களுக்கு அந்த சக்தி உண்டு. கிராமக் கிணறுகளின் சுற்றுச் சுவர்கள் மீது, கருங்கல்லில், இடையறாது மண் குடங்களை வைப்பதனால் உருவாகியுள்ள ஆழமான பள்ளங்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இந்தப் பானைகள் களிமண்ணால் ஆனவை தான் , ஆனாலும் வருடக் கணக்கில், அவை மிகக் கடினமான கருங்கல்லைக் கூடத் துளைத்து விடுகின்றன ! ஆத்ம ஸ்வரூபமான நீங்கள், அல்ப ஸ்வரூபங்கள் அல்ல ! ஆத்மா சோகையானதல்ல. அது, மகத்தான வல்லமையை உருவாக்க வல்ல ஒரு சக்தி வாய்ந்த டைனமோ போன்றதாகும். உங்களது குரு, உங்களுக்கு குறிக்கோளை ( குரி) காட்டுகிறார்; ஆனால், நீங்கள் உங்களது சொந்த முயற்சியின் மூலம் தான், அதை அடைவதற்கான சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்வைத் தருபவனும், வாழ்வை போஷிப்பவனும்,வாழ்வின் குறிக்கோளும் இறைவன் ஒருவன் மட்டுமே - பாபா