azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Truth is God, Faith is God, Love is God; Live in Love. If only you cultivate these three, you can achieve anything. You may encounter any number of losses and difficulties in life. You may undergo a lot of suffering. But, you should never give up truth, faith and love. Loss, suffering and difficulties are like the waves in the ocean of life. They just come and go. But, the water in the ocean remains permanently. Hence, develop the faith of ‘water’, i.e., Divinity. Your thoughts are like passing clouds. Hence keep your faith firmly fixed on God. If you develop love and faith towards God, there is nothing in the world that you cannot achieve. By faith and love, you can even change the earth into sky and the sky into earth. The power of divine name is unparalleled. People often take it lightly. That is a mistake. (Divine Discourse, Nov 13, 2007)
IF YOU PLACE COMPLETE FAITH IN THE LORD AT ALL TIMES, YOU WILL RECEIVE HIS GRACE. - BABA
சத்தியமே சிவம்,விஸ்வாசமே கடவுள், அன்பே இறைவன்; அன்பில் வாழுங்கள்.நீங்கள் மட்டும், இந்த மூன்றையும் அபிவிருத்தி செய்து கொண்டு விட்டால்,நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.நீங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற கஷ்ட, நஷ்டங்களை எதிர் கொள்ளக் கூடும். நீங்கள் அதிகமான துன்பங்களை அனுபவிக்கக் கூடும்.ஆனால் நீங்கள் ஒருபோதும் சத்தியம், விஸ்வாசம் மற்றும் அன்பை கை விடக் கூடாது. நஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள், வாழ்க்கை எனும் கடலின் அலைகள் போன்றவை. அவை வரும், போகும்.ஆனால், கடலில் உள்ள நீர் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.எனவே, விஸ்வாசம் எனும் தண்ணீரை, அதாவது, தெய்வீகத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களது சிந்தனைகள், கலையும் மேகங்கள் போன்றவையே. எனவே, உங்களது விஸ்வாசத்தை உறுதியாக இறைவன் பால் வையுங்கள். இறைவன் பால், அன்பையும், விஸ்வாசத்தையும் நீங்கள் வளர்த்துக் கொண்டு விட்டால், இந்த உலகில் நீங்கள் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை. விஸ்வாசம் மற்றும் அன்பினால், நீங்கள் பூமியை ஆகாயமாகவும், ஆகாயத்தை பூமியாகவும் கூட மாற்ற முடியும். இறைவனது தெய்வீகத் திருநாமத்தின் சக்தி இணையற்றதாகும். மனிதர்கள் இதை, பெரும்பாலும், சாதாரணமாக நினைக்கிறார்கள். அதுவே அவர்கள் செய்யும் ஒரு தவறாகும்.
நீங்கள் , எப்போதும், இறைவன் பால், உங்களது பரிபூரண விஸ்வாசத்தைக் கொண்டு இருந்தால்,
நீங்கள் அவனது அருளைப் பெறுவீர்கள் - பாபா