azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

For Myself I can say, I shower more blessings on those who decry or defame Me. For, those who spread falsehoods about Me derive joy therefrom; I am happy that I am the cause for their exultation and joy! You too must accept this line of argument and be very happy when someone derives joy by defaming you. Do not respond by defaming that person; then, the chain of hatred will bind both and drag both of you down. Life will become a tragedy. Conquer anger by means of fortitude; conquer hatred by love. Do not feed anger with retaliation; do not feed hatred with fury. Forget and forgive all that has happened amongst you until this very moment; start a new chapter of love and brotherhood from now on. Goodness is Godliness. Never talk ill of others; spend your time in showering love, and in mutual help. Love, Love, Love, first Love.. Love as long as life lasts.
LOVE IS THE SOLVENT FOR THE HARDEST OF HEARTS. - BABA
என்னைப் பொறுத்த மட்டில், என்னை இகழ்பவர்களுக்கு நான் அதிகமாகவே என் அருளைப் பொழிகிறேன். ஏனெனில், என்னைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவர்கள் அதிலிருந்து ஆனந்தத்தைப் பெறுகிறார்கள்; அவர்களது குதூகலத்திற்கும், சந்தோஷத்திற்கும் நான் ஒரு காரணம் என்பதால், நான் மகிழ்ச்சி அடைகிறேன் ! நீங்களும் கூட இத்தகைய வாதத்தை ஏற்றுக் கொண்டு, யாருக்காவது உங்களை இகழ்வதால் சந்தோஷம் கிடைக்கும் என்றால்,அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். அந்த மனிதரை திருப்பி இகழ்வதன் மூலம் பதிலளிக்காதீர்கள் ; பின்னர் அந்த த்வேஷச் சங்கிலி, உங்கள் இருவரையும் பிணைத்து,கீழே வீழ்த்தி விடும்.வாழ்க்கையே ஒரு சோகக் கதையாகி விடும்.கோபத்தை , சகிப்புத் தன்மையால் வெல்லுங்கள்; த்வேஷத்தை ப்ரேமையால் வெல்லுங்கள். கோபத்திற்குப் பதிலடியால் இரை போடாதீர்கள்;த்வேஷத்திற்கு, ஆத்திரத்தால் தீனி அளிக்காதீர்கள். இந்தத் தருணம் வரை, உங்களிடையே நடந்த அனைத்தையும் மறந்து, மன்னித்து விடுங்கள்; ப்ரேமை மற்றும் சகோதரத்துவத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள். நற்குணமே தெய்வீகம். பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாதீர்கள்; உங்கள் நேரத்தை அன்பைப் பொழிவதிலும், பரஸ்பரம் உதவுவதிலும் கழியுங்கள்; அன்பு,அன்பு,அன்பு, முதலில் அன்பு - வாழ்வு உள்ளவரை அன்பு செலுத்துங்கள்.
ப்ரேமையே, கடினத்திலும் கடினமான இதயத்தையும்
இளக வைக்கக் கூடியதாகும் -பாபா