azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not yield to the snares of friends or society or miscalled social conventions and become prey to smoking and other such bad habits. They destroy health, happiness, energy and even charm. Smoke disfigures your face and denigrates your lungs. It debilitates you and makes you diseased. The body is the temple of the Lord; keep it in good and strong condition. This skeletal cage or body is the Hasthinapuram, where we have the blind king, Dhritarashtra, the symbol of ignorance, as well as Yudhistira, the symbol of wisdom. Let the forces of Yudhistira win with the help of Sri Krishna. Let the tongue, accustomed to the bitterness of the margosa fruit of worldly triumphs and disasters, taste the sweet honey of remembering the Lord’s name. Experiment with this and you will be surprised at the result. You can feel the vast improvement in peace and stability in you and around you. Learn this easy lesson, get immersed in joy, and let others also share that joy with you. (Divine Discourse, Sep 2, 1958.)
ANGER BREEDS DANGER. REMOVE THE ROOTS OF THE WEED OF EGOISM
FROM THE FIELD OF YOUR HEART, THAT IS TRUE SADHANA. - BABA
நண்பர்கள் அல்லது சமுதாயம் அல்லது தவறான சமூக சம்பிரதாயங்களின் கண்ணிப் பொறிகளுக்கு இடம் கொடுத்து, புகை பிடித்தல் மற்றும் அதைப் போன்ற பிற தீய பழக்கங்களுக்கு இரையாகி விடாதீர்கள்.அவை, உங்களது ஆரோக்யம்,சந்தோஷம், சக்தி , ஏன் அழகைக் கூட அழித்து விடுகின்றன.புகை பிடிப்பது உங்கள் முகத்தை விகாரமாக்கி, உங்களது நுரையீரல்களை பாதித்து விடுகிறது. அது உங்களை நிலைகுலையச் செய்து, நோயாளியாக்கி விடுகிறது. இந்த உடல் இறைவன் உறையும் ஆலயமாகும்; அதை நன்றாகவும், வலிமையான நிலையிலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உடல் எனும் ஹஸ்தினாபுரத்தில், அறியாமை எனும் குருட்டு அரசனான திருதராஷ்டிரனும், ஞானம் எனும் யுதிஷ்டிரனும் இருக்கிறார்கள். யுதிஷ்ட்டிரனின் படைகள், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் துணையுடன் வெற்றி பெறட்டும். உலகியலான வெற்றிகள் மற்றும் பேரிடர்கள் எனும் வேப்பம் பழத்தின் கசப்பிற்கு பழகிப் போன நாக்கு,இறைவனின் திருநாமத்தை நினைவு கூறுதல் என்ற இனிய தேனை சுவைக்கட்டும். இதைப் பரிசோதித்துப் பாருங்கள்; விளைவுகளைக் கண்டு நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். உங்களுள்ளும், உங்களைச் சுற்றியும், சாந்தி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்படும் பரந்த முன்னேற்றத்தை நீங்கள் உணர முடியும். இந்த எளிமையான பாடத்தைக் கற்றுக் கொண்டு, ஆனந்தத்தில் திளைத்து, அந்த ஆனந்தத்தை மற்றவர்களும், உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டும்.
ஆத்திரம், ஆபத்தை,உருவாக்கும். உங்களது இதயம் எனும் வயலிலிருந்து, அஹங்காரம் எனும் களைகளை வேரோடு பிடுங்கி எறியுங்கள். அதுவே உண்மையான ஆன்மீக சாதனை - பாபா