azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Atma-Rama, the Rama who confers eternal joy, is present in your heart. So repeat His Name, it is the Sun that can make the lotus in your heart bloom. Rama is not the son of Emperor Dasaratha but of the ruler of your ten senses (dasendriyas). The recital of Rama’s name must become as automatic, frequent and essential as breathing. The seed letters of Rama are from the Shiva and Narayana mantra, for it is composed of the second letters of both: Na-ra-yana and Na-mah-sivaya. The name Rama endows you with power and all the spiritual capital you need. It also has a form too, and you should picture the form when you repeat the name; then the name becomes concrete and its remembrance is easier. Live always in the presence of that form-filled name. Then life becomes one continuous worship of the Lord. (Divine Discourse, Sep 02, 1958)
SELECT ONE NAME AND ONE FORM FOR SMARANA AND MANANA, BUT DO NOT TALK
ILL OF OTHER NAMES AND FORMS. - BABA
சாஸ்வதமான ஆனந்தத்தை அருளும் ராமனான, ஆத்மா ராமன் உங்கள் இதயத்தில் இருக்கிறான். எனவே, உங்களது இதயத் தாமரையை மலர வைக்கும் ஆதவனான, அவனது திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுங்கள். ஸ்ரீராமன் தசரத மஹாராஜனின் புதல்வன் அல்ல, உங்களது பத்து இந்திரியங்களை ( தசேந்திரியாஸ்) ஆளுபவரின் புதல்வன். ஸ்ரீராம நாமஸ்மரணை, சுவாசிப்பதைப் போல, தானாகவும், அடிக்கடியும், இன்றியமையாததாகவும் இருக்க வேண்டும். ராம என்பதன் மூல எழுத்துக்கள் சிவ மற்றும் நாராயண மந்திரங்களிலிருந்து வந்தவை; அதாவது, அவை இரண்டின் இரண்டாவது அக்ஷரங்களிலிருந்து தொகுக்கப் பட்டவை – நா-ரா-யண மற்றும் ந-ம-சிவாய. ஸ்ரீராம நாமம் உங்களுக்குத் தேவையான சக்தியையும், அனைத்து ஆன்மீக முதலீட்டுகளையும் உங்களுக்கு அளிக்கிறது. அதற்கு ஒரு ரூபமும் உண்டு; நாமத்தை உச்சரிக்கும் போது, அதன் ரூபத்தையும் நீங்கள் உருவகப் படுத்திக் கொள்ள வேண்டும்; பின்னர் அந்த நாமம் உறுதி பெற்று, அதை நினைவு கூறுவது எளிதாகி விடும், எப்போதும், அந்த ரூபத்தில் திளைத்த நாமத்துடன் வாழுங்கள். பின்னர் வாழ்க்கையே இடையறாத ஒரு இறை வழிபாடாக ஆகி விடும்.
நாமஸ்மரணைக்கும், தியானத்திற்கும் ஒரு இறை நாமத்தையும், ரூபத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால் மற்ற இறை நாம,ரூபங்களை இகழ்ந்து பேசாதீர்கள் - பாபா