azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not be carried away by others’ opinions – either good or bad. Develop your own line of thinking, based on your conscience. Develop self confidence. Where there is self-confidence, there will be self-satisfaction. Where there is self-satisfaction, there will be self-sacrifice. And through self-sacrifice comes self-realisation. Self-confidence is the foundation for the building; it remains below the surface of the earth. Self-satisfaction represents the walls, self-sacrifice is the roof, and the life in this house is self-realisation. Without the foundation of self-confidence, self-realisation cannot be achieved. Therefore, build up your self-confidence slowly. In this process, start early, drive slowly and reach your goal of self-realisation safely. First and foremost, develop love. It is easier to cultivate love than all other qualities. There is nothing in this world which cannot be achieved with love. (Divine Discourse, Nov 4, 2002.)
நல்லவையோ, கெட்டவையோ, பிறரது கருத்துக்களுக்கு அடிமை ஆகி விடாதீர்கள். உங்களது மனச்சாட்சியின் அடிப்படையில், உங்களுக்கு என்றே ஒரு சொந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கு தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கு சுய திருப்தி இருக்கும். எங்கு சுயதிருப்தி இருக்கிறதோ, அங்கு சுய தியாகம் இருக்கும். சுய தியாகத்தின் மூலம், ஆத்ம சாக்ஷாத்காரம் எனும் தன்னை உணர்தல் என்ற நிலை வரும். தன்னம்பிக்கையே, கட்டித்தின் அஸ்திவாரம்; அதுவே பூமிக்கு அடியில் இருக்கிறது. சுயதிருப்தி சுவர்களையும், சுய தியாகம் கூரையையும் குறிக்கின்றன; இப்படிப் பட்ட வீட்டில் வாழ்வதே தன்னை உணர்தல் ஆகும். தன்னம்பிக்கை என்ற அஸ்திவாரம் இன்றி, ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைய முடியாது. எனவே, தன்னம்பிக்கையை மெதுவாக வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழியில், சீக்கிரமே கிளம்பி, மெதுவாகப் பயணித்து, தன்னை உணர்தல் என்ற உங்களது குறிக்கோளை பத்திரமாக அடையுங்கள். முதன் முதலில் ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள். ப்ரேமையை வளர்த்துக் கொள்வது என்பது மற்ற அனைத்து குணங்களை விடவும் எளிதானதாகும். இந்த உலகில் , ப்ரேமையைக் கொண்டு சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.