azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 29 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 29 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

‘Navaratri’ means nine nights. Darkness is associated with night. What is this darkness? It is the darkness of ignorance. The purpose of the Navaratri celebrations is to enable you to win over darkness which has enveloped you. When a reference is made to Devi, it signifies the unified form of Durga, Lakshmi and Saraswathi. Lakshmi, who is the embodiment of all prosperity, is represented by the heart. The mouth represents Saraswathi. Purity in action (Kriya Shuddhi) is represented by Durga. To secure the grace of the Lord, you must cultivate purity of the heart, purity in speech and purity in action. This triple purity is described in Vedantic parlance as ‘Tripurasundari’. Observe Navratri to get rid of the darkness within you, by cultivating the triple purity of thought, word and deed. On this sacred occasion of Navarathri, you must also revere Nature. Natural resources like water, air, power and minerals must be used economically, without misuse, abuse or waste. (Divine Discourse, Sep 27, 1992.)
WORSHIP GOD BY OFFERING YOUR EVERY ACT AT HIS LOTUS FEET. - BABA
நவராத்ரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். இரவு என்பது இருளுடன் சம்பந்தப் பட்டது. இந்த இருள் என்பது என்ன? இதுவே அறியாமை எனும் இருளாகும். நவராத்ரிப் பண்டிகைகளின் நோக்கம்,உங்களைச் சூழ்ந்துள்ள இருளை, உங்களால் வெல்ல முடியுமாறு செய்வது தான். தேவி என்று சொல்லும் போது,அது துர்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியின் ஒன்றிணைந்த ரூபத்தைக் குறிக்கிறது. சிந்தனையே,அனைத்து வளங்களின் தேவதையான லக்ஷ்மியைக் குறிக்கிறது. வாக்கு , சரஸ்வதியைக் குறிக்கிறது. செயல் தூய்மை ( க்ரியா சுத்தி), துர்கையைக் குறிக்கிறது. இறைவனது அருளைப் பெற, நீங்கள் சிந்தனை, சொல் மற்றும் செயலில் பரிசுத்தத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்., இந்த மூன்று விதமான தூய்மை, வேதாந்த பரிபாஷையில் ‘’ திரிபுரசுந்தரி ‘’ என்று வர்ணிக்கப் படுகிறது. நவராத்ரியில், சிந்தனை, சொல் மற்றும் செயலில் தூய்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுள் உள்ள இருளை நீக்குங்கள். இந்த புனிதமான நவராத்ரியில், நீங்கள் இயற்கையையும் போற்ற வேண்டும். இயற்கை வளங்களான, நீர், காற்று, சக்தி மற்றும் தாதுப்பொருட்களை தவறின்றியும், வீணடிக்காமலும், அளவோடு பயன்படுத்த வேண்டும்.
உங்களது ஒவ்வொரு செயலையும், அவனது தாமரைப் பாதங்களில் அர்ப்பணிப்பதன் மூலம், இறைவனை வழிபடுங்கள் - பாபா