azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! There is nothing bad in Creation. If some things appear so, it is entirely due to faulty vision. The latent bad feelings within create the impression that certain things are bad. Hence it is important to develop pure and loving feelings. Always be immersed in the thought of God and constantly chant His Name. Be ever saturated with the divine feeling. If dutifully followed, spiritual practices are guaranteed to remove all the contamination within you. Never indulge in bad actions, never criticise others, blame others, or accuse others. Bad thoughts pollute the air and also infect others; this is how bad vibrations spread. Hence scrupulously avoid bad company and inappropriate behaviour. Always avoid bad thoughts, inappropriate looks, feelings and actions. Instead, be ever sacred and do only good. Make every possible effort to venerate and revere the elements in a suitable manner. Your every breath must resonate the chant of God’s Name. Always sing His Glory. (Divine Discourse, May 15, 2000.)
GOD IS ALL MERCY; ADORE HIM AS LONG AS YOU HAVE BREATH,
SO LONG AS YOU ARE CONSCIOUS. - BABA
ப்ரேமையின் ஸ்வரூபங்களே ! சிருஷ்ட்டியில் தீயவை என்று எதுவுமே இல்லை. ஏதாவது அவ்வாறு தோன்றினால், அது முழுவதும் தவறான திருஷ்ட்டியினாலேயே. உள்ளுறையும் தீய உணர்வுகள், சில பொருட்கள் தீயவை என்ற அபிப்ராயத்தை உருவாக்குகின்றன.எனவே, பரிசுத்தமான மற்றும் ப்ரேமையுடன் கூடிய உணர்வுகளை வளர்த்துக் கொள்வது அவசியம்.எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து, இடையறாது இறை நாமஸ்மரணை செய்யுங்கள். என்றும் தெய்வீக உணர்வுகளில் தோய்ந்திருங்கள். கடமை உணர்வோடு கடைப் பிடிக்கப் பட்டால், ஆன்மீக சாதனைகள் உங்களுள் உள்ள அனைத்து மாசுக்களையும் கண்டிப்பாக நீக்கி விடும். ஒருபோதும் தீய செயல்களில் ஈடுபடாதீர்கள், ஒருபோதும் பிறரை விமர்சிக்கவோ, பழிக்கவோ அல்லது குற்றம் சாட்டவோ செய்யாதீர்கள். தீய சிந்தனைகள் சூழ்நிலையை மாசு படுத்தி, மற்றவர்களையும் பாதிக்கின்றன; இவ்வாறு தான் தீய அதிர்வுகள் பரவுகின்றன. எனவே,தீயவர்களின் நட்பையும், தகாத நடத்தையையும் அறவே புறக்கணியுங்கள். தீய சிந்தனைகள், தகாத பார்வைகள், உணர்வுகள் மற்றும் செயல்களை எப்போதும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக, எப்போதும் புனிதமாக இருந்து நல்லவற்றையே செய்யுங்கள். பஞ்சபூதங்களைப் போற்றி, மதிப்பதற்கான எல்லா முயற்சிகளையும், தகுந்த முறையில் செய்யுங்கள். உங்களது ஒவ்வொரு மூச்சும், இறை நாமத்தை எதிரொலிக்க வேண்டும். எப்போதும் இறைவனது புகழைப் பாடுங்கள்.
இறைவன் கருணையே நிறைந்தவன்; உங்களுள் மூச்சு இருக்கும் வரையிலும், உங்களுக்கு நினைவு இருக்கும் வரையிலும் அவனைப் போற்றி வழிபடுங்கள் - பாபா