azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The supreme Shakti manifests herself in the form of Durga, Lakshmi and Saraswati. Durga grants us energy - physical, mental and spiritual. Lakshmi bestows on us wealth of many kinds, not just money but intellectual wealth, the wealth of character, the wealth of health and so on. She grants untold riches to us. And Saraswati bestows on us intelligence, the capacity for intellectual enquiry and the power of discrimination. Your own mother is the combination of all these Divine beings. The life of a person who cannot respect and love one’s own venerable mother is utterly useless. Your mother provides you with energy, wealth and intelligence. She constantly desires our advancement in life. So she represents all the three goddesses that we worship during the Navaratri festival. Recognising your mother as the very embodiment of all divine forces, show reverence to her and treat her with love. This is the true message of Navaratri. (Divine Discourse, Oct 14, 1988.)
THERE IS NO HIGHER GOD THAN THE MOTHER. - BABA
பரப்பரம்மமே, துர்கா, லக்ஷ்மி,சரஸ்வதியாக ரூபமெடுத்துக் கொள்கிறது. துர்கா, நமக்கு, உடல், மனம் மற்றும் ஆன்மீக சக்தியை அளிக்கிறாள். லக்ஷ்மி , நமக்கு பல விதமான வளங்களை, பணத்தை மட்டும் அல்லாது, புத்தி கூர்மை, நற்குணங்கள் போன்ற பல வளங்களையும் அளிக்கிறாள்.அவள் விவரிக்க முடியாத செல்வங்களைத் தருகிறாள். சரஸ்வதி நமக்கு புத்தி, அறிவு பூர்வமான ஆராயும் மனப்பாங்கு மற்றும் பகுத்தறிவை அளிக்கிறாள். உங்களது சொந்தத் தாயே, இந்த அனைத்து தெய்வீக அம்சங்களின் இணைப்பே ஆவாள். போற்றத் தக்க தனது சொந்தத் தாயை மதித்து,நேசிக்காத ஒருவரது வாழ்க்கை வெறும் வீணே. உங்களது தாய், உங்களுக்கு சக்தி, செல்வம் மற்றும் புத்தியை அளிக்கிறாள். வாழ்க்கையில் உங்களது முன்னேற்றத்தையே அவள் அனுதினமும் விரும்புகிறாள். எனவே, நவராத்ரிப் பண்டிகையில் நாம் வழிபடும் இந்த மூன்று தெய்வங்களின் பிரதிநிதி அவளே. அனைத்து தெய்வீக சக்திகளின் திருவுருமாக இருப்பது உங்களது தாயே என்பதைப் புரிந்து கொண்டு, அவளை மதித்து, அவளை அன்புடன் நடத்துங்கள்.இதுவே நவராத்ரியின் உண்மையான அறிவுரையாகும்.
தாயிற் சிறந்ததொரு தெய்வம் எங்கும் இல்லை - பாபா