azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Pray intensely and with faith. Then, Grace will be showered on you. When your heart is soaked in Love, it cannot be contaminated by egoism and its evil consequences. Just as you crave for physical health, which means health for the limbs of the body, you should strive for the health of humanity, which means peace and joy for all sections of society in all nations. If you dwell in that wider outlook, you will start feeling less and less for your own troubles and worrying more and more about the troubles of others. That is the initial offering of yourself in the great ‘yajna’ (ritual sacrifice) called ‘living.’ You should merge your welfare with the welfare of the world. How can you be happy when your neighbour is in misery? Therefore I call upon you to give up praying for your own advancement; pray for the peace, prosperity and happiness of all humanity, irrespective of clime or colour. (Divine Discourse, Dasara, Oct 7, 1970.)
WISDOM IS THE RECOGNITION OF THE IMMANENCE
OF THE DIVINE IN EVERY BEING. - BABA
ஆழ்ந்தும்,நம்பிக்கையுடனும் பிரார்த்தியுங்கள். பின்னர், உங்கள் மீது இறை அருள் பொழியும். உங்கள் இதயம் ப்ரேமையில் தோய்ந்திருக்கும் போது, அதை அஹங்காரம் மற்றும் அதன் தீய விளைவுகள் மாசடையச் செய்ய முடியாது.எவ்வாறு நீங்கள் உடல் ஆரோக்யம், அதாவது உடலின் அங்கங்களின் நலனிற்காக ஏங்குகிறீர்களோ, அவ்வாறே, அனைத்து நாடுகளின், அனைத்து சமுதாயங்களுக்கும் சாந்தி, சந்தோஷங்களை அளிக்கும் மனித குலத்தின் ஆரோக்யத்திற்காகப் பாடுபட வேண்டும். நீங்கள் அந்த பரந்த மனப்பாங்குடன் இருந்தால், நீங்கள் உங்களது துன்பங்களைப் பற்றிக் குறைவாகவும், மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி அதிகமாகவும் கவலைப் பட ஆரம்பிப்பீர்கள். அதுவே, வாழ்க்கை எனும் தலை சிறந்த யக்ஞத்தில் நீங்கள் உங்களையே முதல் ஆஹூதியாக இடுவதைப் போன்றதாகும். நீங்கள் உங்களது க்ஷேமத்தை உலகத்தின் க்ஷேமத்துடன் ஒன்றரக் கலந்து விட வேண்டும். உங்களது அண்டை வீட்டார் துன்பத்தில் வாடும்போது, நீங்கள் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? எனவே, நீங்கள் உங்களது சொந்த முன்னேற்றத்திற்காக பிரார்த்திப்பதை விட்டு விட்டு, குல, வர்ண பேதமின்றி, அனைத்து மனித குலத்தின் சாந்தி, சந்தோஷம் மற்றும் வளமைக்காக பிரார்த்தியுங்கள் என நான் வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு ஜீவராசியிலும்,அங்கிங்கெனாதபடி எங்கும் இறைவன் உறைகிறான் என்பதை உணர்வதே ஞானமாகும்- பாபா