azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Today it appears that unity has altogether disappeared everywhere and enmity is on the rise. Do not develop opposition or differences amongst you, wherever you are. It is not healthy. Even if somebody makes you angry, do not fight with them. Understand that by fighting with others, you actually harm yourself. Remember, jealousy gives rise to hatred and is harmful to your well-being. Hence achieve unity and practice to live with unity in all matters. Control your thoughts. This is the quality of a truly educated person. This is the true spirit of ‘Educare’. All are human beings. All are children of God. Therefore, live with unity without giving room to any differences. Everything will become good if you keep your heart pure constantly. The end of education is good character. With good character, you can achieve anything in life. Hence it is very essential for you to always safeguard your character. Such a person is a truly learned one! (Divine Discourse, Nov 22, 2010.)
SACRED THOUGHTS, VIRTUOUS QUALITIES AND NOBLE-MINDED ACTIONS ARE BASIC FOUNDATIONS OF GOOD CHARACTER. - BABA
இந்நாளில், எங்கும், ஒற்றுமை முழுவதுமாக மறைந்து, பகைமை உணர்வு வளர்ந்து வருவது போலத் தோன்றுகிறது. நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்குள் எதிர்ப்பு அல்லது வித்தியாசங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.அது ஆரோக்யமானதல்ல.யாராவது உங்களைக் கோபப்படச் செய்தாலும், அவர்களுடன் சண்டை போடாதீர்கள். பிறருடன் சண்டை போடுவதால், நீங்கள் உண்மையில் உங்களையே பாதித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பொறாமை, த்வேஷத்தை உருவாக்குகிறது, அது உங்களது நலனுக்குக் கெடுதல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஒற்றுமையைப் பெற்று, எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையுடன் வாழ்வதைக் கடைப்பிடியுங்கள். உங்களது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துங்கள். இதுவே, உண்மையிலேயே படித்த ஒருவரது குணமாகும். இதுவே ‘’ விழுக்கல்வியின்’’ உண்மையான சாரமும் ஆகும். அனைவரும் மனிதர்களே. அனைவரும் இறைவனின் குழந்தைகளே. எனவே, எந்த வித்தியாசங்களுக்கும் இடம் கொடாமல் ஒற்றுமையாக வாழுங்கள். நீங்கள் உங்கள் இதயத்தை, இடையறாது தூய்மையாக வைத்துக் கொண்டால், அனைத்தும் நல்லவையாகவே ஆகி விடும். கல்வியின் முடிவு, நல்லொழுக்கமே. நல்லொழுக்கத்தின் மூலம் நீங்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். எனவே, நீங்கள் உங்களது குணநலனை எப்போதும் பாதுகாத்துக் கொள்வது , உங்களுக்கு அத்தியாவசியமாகும். இப்படிப் பட்ட ஒரு மனிதரே உண்மையில் கற்றுத் தேர்ந்தவராவார் !
புனிதமான சிந்தனைகள், ஒழுக்கமான பண்புகள் மற்றும் சீரிய எண்ணமுடைய செயல்கள் ஆகியவையே நற்குண நலன்களின் அடிப்படை அஸ்திவாரங்களாகும் - பாபா