azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Emperor Bali was no doubt a great devotee with humility. However, there was an element of ego in him. God will tolerate anything but never tolerate anger and ego. God does not appreciate these qualities. What is this ego? What for is this ego? Is it for physical beauty or strength of the senses or intellectual acumen or wealth? None of these is permanent. Ego also breeds several other evil qualities! God has gifted every human being with sacred and noble qualities such as Truth (Satya), Righteousness (Dharma), Peace (Shanti), Love (Prema) and Non-violence (Ahimsa). Develop these qualities. These are the five vital airs (pancha-pranas) for a human being. Anger, jealousy, hatred, etc., are evil qualities befitting an animal. How can a person with such animal qualities be called a human being? A human being is one who has good qualities. Follow truth. Truth is God. Cultivate love. Love is God. Live in love. (Divine Discourse, Sep 5, 2006)
EGO IS VERY DANGEROUS AND POWERFUL. IT RUINS YOUR CHARACTER- BABA
மஹாபலிச் சக்கரவர்த்தி,சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு மிகச் சிறந்த பணிவான பக்தர் தான். இருந்தாலும் அவரிடம் ஓரளவு அஹங்காரம் இருந்தது. இறைவன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான்; ஆனால் ஒருபோதும், கோபம் மற்றும் அஹங்காரத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டான். இறைவன் இந்த குணங்களை மெச்சுவதில்லை. இந்த அஹங்காரம் என்பது என்ன ? இந்த அஹங்காரம் எதற்காக ? இது உடல் அழகினாலா அல்லது புலன்களின் வலிமையாலா அல்லது புத்தி சாதுர்யத்தினாலா அல்லது செல்வத்தினாலா? இதில் எதுவுமே நிலையானவை அல்ல. அஹங்காரம், மேலும் பல தீய குணங்களையும் இனப் பெருக்கம் செய்கிறது ! இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும், சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்ஸை எனும் புனிதமான மற்றும் சீரிய குணங்களைப் பரிசாக அளித்துள்ளான். இந்த குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை ஒரு மனிதனுக்கு பஞ்ச ப்ராணன்களைப் போன்றவை. கோபம், பொறாமை,த்வேஷம் போன்றவை மிருகங்களுக்கான தீய குணங்கள். இப்படிப் பட்ட தீய குணங்களைக் கொண்ட ஒருவரை மனிதன் என்று எவ்வாறு கூற முடியும்? நற்குணங்களைக் கொண்ட ஒருவனே மனிதன். சத்தியத்தைப் பின்பற்றுங்கள், சத்யமே தெய்வம்.அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அன்பே இறைவன். அன்பில் வாழுங்கள்.
அஹங்காரம் மிகவும் அபாயகரமானதும், ஆற்றல் படைத்ததும் ஆகும். அஹங்காரம் உங்களது நற்குணங்களை அழித்து விடும் - பாபா