azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

People repose their faith in such a frail and impermanent physical body. This body is like a puppet with nine holes in it, and it may collapse at any time with a mere sneeze. Reposing their faith in such a perishable body, people forget the invaluable ornaments stored in it. That is the reason why you suffer mental agitation. You go to a millionaire and enquire, “Sir! You have everything in this world; but do you have peace?” He will immediately reply, “I have everything but not peace.” Wherever you see in this world today, there are only ‘pieces’, not ‘peace’. Peace is very much in your inner self. Hence search for it by means of an inward journey. That is your duty. Unfortunately you forget this sacred duty and desire for paltry and mean things. When you are able to manifest your own innate noble qualities, you can experience true and eternal peace. (Divine Discourse, Sep 5, 2006)
I – want – peace. ‘I’ is ego, ‘want’ is desire. Remove ego and desire and you have peace. - Baba
மனிதர்கள் இப்படிப் பட்ட ஒரு பலஹீனமான,நிலையற்ற உடலின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.இந்த உடல் ,நவத்வாரங்களைக் கொண்ட ஒரு பொம்மலாட்ட பொம்மை போன்றது; அது எந்த நேரத்திலும், வெறும் ஒரு தும்மல் வந்தால் கூட சரிந்து விடும்.இப்படிப் பட்ட ஒரு அழியக் கூடிய உடலின் மீது நம்பிக்கையை வைத்துக் கொண்டு, அதில் சேமித்து வைக்கப் பட்டுள்ள விலை மதிப்பற்ற ஆபரணங்களை மறந்து விடுகிறார்கள். அந்தக் காரணத்தினால் தான் நீங்கள் மனக் கலக்கங்களால் துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். ஒரு கோடீஸ்வரரிடம் சென்று, நீங்கள், ‘’ ஐயா ! உங்களிடம் இந்த உலகித்திலுள்ள அனைத்தும் இருக்கின்றன. உங்களிடம் மனச்சாந்தி இருக்கிறதா ? ‘’ என்று கேளுங்கள். அவர் உடனடியாக ‘’ என்னிடம் மனச்சாந்தியைத் தவிர எல்லாம் இருக்கிறது.’’ என்று தான் பதிலளிப்பார். இன்று உலகில் நீங்கள் எங்கு பார்த்தாலும் ‘’ PIECES “ ( சிதறல்கள் ) தான் இருக்கிறதே அன்றி, ‘’PEACE “( மனச் சாந்தி) இல்லை. மனச் சாந்தி என்பது உங்களது அந்தராத்மாவிலேயே இருக்கிறது. எனவே, ஒரு உள்ளார்ந்த பயணத்தின் மூலம் அதைத் தேடுங்கள். அதுவே உங்கள் கடமை. துரதிருஷ்ட வசமாக, நீங்கள் இந்த புனிதமான கடமையை மறந்து, துச்சமான மற்றும் அற்பமான பொருட்களுக்கு ஆசைப் படுகிறீர்கள். எப்போது, உங்களால், உங்களது சொந்த உள்ளார்ந்த, சீரிய குணங்களை வெளிப் படுத்த முடிகிறதோ, அப்போது நீங்கள் உண்மையான மற்றும் நிரந்தரமான மனச்சாந்தியை அனுபவிக்க முடியும்.
எனக்கு- சாந்தி- வேண்டும். ‘’ எனக்கு’’ என்பது அஹங்காரம். ‘’ வேண்டும் ‘’ என்பது ஆசை. அஹங்காரத்தையும் ,ஆசையையும் நீங்கி விடுங்கள், உங்களுக்கு சாந்தி கிடைக்கும் - பாபா