azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as the body is the house you live in, the world is the body of God. An ant biting the little finger of your foot is able to draw your full attention to the spot, and you react to that pain immediately. You must similarly feel the pain, misery, joy or elation, wherever it is present; you must make an effort to protect your countries and fellow countrymen, however remote may be the place where the suffering occurs. Be kind with all your kith and kin. Expand your empathy; serve others who are in need to the extent your skill and resources permit you. Do not fritter away your talents in profitless channels. Everyone consumes a large quantity of food, but never calculates what one does in return to the society that helped one to live! The food you eat must be transformed into service, either towards one's best interest, or for the interests of others. You should not be a burden on others or an enemy of yourself. (Divine Discourse, Feb 3, 1964)
WHOEVER LOVES ALL AND SERVES ALL,IS LOVED AND HONOURED BY THE LORD - BABA
எவ்வாறு, இந்த உடல் நீங்கள் வாழும் இல்லமோ , அவ்வாறே இந்த உலகமும் இறைவனது உடலாகும்.ஒரு எறும்பு உங்களது கால் சுண்டு விரலைக் கடிப்பது, உங்களது முழு கவனத்தையும்,அந்த இடத்திற்குக் கொண்டு வருகிறது; நீங்கள் உடனேயே அந்த வலிக்காக செயல் படுகிறீர்கள். அதைப் போலவே, நீங்கள் துன்பம், துயரம், சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை எங்கு இருந்தாலும் அதை உணர வேண்டும்; நீங்கள், உங்களது நாடுகளையும், சக நாட்டவரையும், அவர்கள் துன்பப் படும் இடம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், காப்பாற்ற முயல வேண்டும். உங்களது உற்றார், உறவினர் அனைவரிடமும் கனிவுடன் இருங்கள்.உங்களது பச்சாதாப உணர்வை விரிவாக்கி, உங்களது திறன் மற்றும் வளங்களுக்கு ஏற்றவாறு தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.பயனற்ற வழிகளில் உங்களது திறன்களை வீணடிக்காதீர்கள். ஒவ்வொருவரும் பெரிய அளவில் உணவை விழுங்குகிறார்கள்; ஆனால் அவர்கள் வாழ்வதற்கு வழி வகுத்த சமுதாயத்திற்கு பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒருபோதும் கணக்கிடுவதில்லை ! நீங்கள் உண்ணும் உணவு,உங்களது மேன்மைக்காகவோ அல்லது பிறரது நன்மைக்காகவோ சேவையாக பரிமளிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு சுமையாகவோ அல்லது உங்களுக்கே ஒரு எதிரியாகவோ இருக்கக் கூடாது.
எவர் ஒருவர் அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை புரிகிறாரோ, அவரை ,இறைவனும் நேசித்து கௌரவிக்கிறான் - பாபா