azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Samskriti, the word for culture, is derived from the word, samskara. Samskara is the dual process of removing the dust and dirt of vices and the planting of virtues. Know that envy is the stickiest dirt! You must be happy when others are happy. Rama is said to have been happy when others were happy; the Ramayana says that He was then as happy as if the event that made the other person happy had happened to Him. That is the true test. Krishna speaks of Arjuna as envy-less (An-asuya). What a great compliment! Therefore, He proposed to teach him the mysteries of spiritual discipline. Sathyabama is infamous in many stories because of her jealousy; in every instance Krishna attempts to put down this vice and teach her humility. Have Love towards the Lord, but do not become depressed with envy when others also love Him or get attached to Him. (Divine Discourse, Oct 9, 1964)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND SELFISHNESS
AND PURIFY YOUR HEARTS - BABA
ஸம்ஸ்க்ருதி என்ற வடமொழிச் சொல், ஸம்ஸ்காரா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்.ஸம்ஸ்காரா என்பது தீய குணங்கள் என்ற மாசுகளைக் களைவது, நற்குணங்களுக்கு வித்திடுவது என்ற இரண்டு விதமான முறையாகும்.பொறாமை என்பது விடாமல் ஒட்டிக் கொள்ளக் கூடிய ஒரு தீய குணமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ! மற்றவர்கள் சந்தோஷப்படும் போது, நீங்களும் சந்தோஷப் பட வேண்டும்.ஸ்ரீராமர், பிறர் மகிழ்ச்சி அடையும் போது, தானும் மகிழ்ச்சி அடைவார் என்று கூறப் படுகிறது; ஸ்ரீமத் ராமாயணம்,அடுத்த மனிதரை மகிழ்ச்சி அடையச் செய்த சம்பவம், தனக்கே நிகழ்ந்ததைப் போல, ஸ்ரீ ராமர் அப்போது மகிழ்வார் எனக் கூறுகிறது. அதுவே உண்மையான சோதனையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜூனனை பொறாமை அற்றவர் ( அன்-அசூயா) என்று கூறுகிறார். எவ்வளவு மகத்தான பாராட்டு இது ! எனவே தான் அவர், அர்ஜூனனுக்கு ஆன்மீக சாதனைகளின் ரகசியங்களை போதிக்க விழைந்தார். சத்யபாமா, பல கதைகளில் அவளது பொறாமையின் காரணமாக இழிவாகப் பேசப்படுகிறார்;ஒவ்வொரு முறையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவளது இந்தத் தீயை குணத்தை கண்டித்து, அவளுக்கு பணிவைப் போதிக்க முயலுகிறார். இறைவன் பால் அன்பு கொள்ளுங்கள்; ஆனால் மற்றவர்களும் கூட அவனை நேசித்தோ அல்லது அவனுடன் இணைந்தோ இருந்தால், பொறாமையால் மனச்சோர்வு அடையாதீர்கள்.
ப்ரேமையையும், கருணையையும் புனருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும்,சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்க வேண்டும் - பாபா