azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The six vices of lust, anger, greed, pride, delusion and envy have enveloped most people. Attachment and aversion have gripped them. Due of this most people have forgotten their real nature and are filled with pride of all sorts. Losing their power of discrimination (vichakshana-jnana), people indulge in all kinds of misbehavior towards others. The scriptures prescribe devotional worship (upasana) as a means of getting rid of these bad qualities. Upasana is the process of elimination of the accumulated impurities in the mind resulting from impure thoughts and actions in the past. As a lighted joss stick removes by its fragrance the bad odour in a place, devotional repetition of the name of God drives away the impurities of the mind. Remember, all actions done as an offering to God are pure actions (sat-karmas). Through such actions, the mind is purified. (Divine Discourse, Oct 4, 1989)
NEVER TRY TO CONTROL THE MIND. FOLLOW THE INTELLECT,THEN THE MIND WILL NATURALLY SUBMIT ITSELF. THE MASTER OF YOUR MIND SHOULD BE YOUR INTELLECT- BABA
ஆறு தீய குணங்களான காம,க்ரோத,லோப,மோஹ, மத , மாத்ஸர்யம் ஆகியவை பெரும்பாலான மனிதர்களை சூழ்ந்து கொண்டுள்ளன. விருப்பு, வெறுப்புக்கள் அவர்களைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன. இதன் காரணமாக, பலர் தங்களது உண்மை நிலையை மறந்து,எல்லா விதமான தற்பெருமைகளால் நிரம்பி உள்ளனர்.அவர்களது பகுத்தறிவு சக்தியை ( விசக்ஷனா-ஞான ) இழந்து, மனிதர்கள் பிறரிடம் எல்லா விதமான தவறான நடத்தைகளிலும் ஈடுபடுகிறார்கள்.சாஸ்திரங்கள்,பக்தியுடனான வழிபாட்டை ( உபாஸனா), இந்தத் தீய குணங்களை விட்டு ஒழிப்பதற்கான ஒரு முறையாக பரிந்துரைக்கின்றன. கடந்த காலத்தின் தூய்மையற்ற சிந்தனைகள் மற்றும் செயல்களின் விளைவாக மனதில் தேங்கியிருக்கும் அசுத்தங்களை நீக்கும் முறையே உபாஸனையாகும். ஏற்றி வைக்கப் பட்ட ஊதுபத்தி, தனது சுகந்தத்தின் மூலம் ஒரு இடத்தில் உள்ள துர்நாற்றத்தைப் போக்குவது போல, இறைநாமஸ்மரணை மனதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இறையார்ப்பணமாக செய்யும் அனைத்து செயல்களும் நற்கருமங்களே ( ஸத்கர்மா ) என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படிப் பட்ட செயல்களால் மனம் பரிசுத்தமடைகிறது.
ஒருபோதும், உங்கள் மனதைக் கட்டுப் படுத்த முயலாதீர்கள். புத்தியைப் பின்பற்றுங்கள்; பின்னர், மனம் தானாகவே அடிபணிந்து விடும். புத்தியே உங்கள் மனதின் தலைவனாக இருக்க வேண்டும்- பாபா