azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop discrimination and evaluate even your own needs and wishes. Examine each on the touchstone of essentiality. When you pile up things in your apartments, you only promote darkness and dust; so also, do not collect and store too many materials in your mind. Travel light! Have just enough to sustain life and maintain health. The pappu (a lentils dish) must have only enough uppu (salt) to make the dish tasty. Do not spoil the dish by adding too much salt. Similarly, life becomes too difficult to bear if you put into it too much desire. Limit your desires to your capacity and even among them, have only those that will grant lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also live in accordance with the code of rules that regulate life or the stage you have reached. (Divine Discourse, Aug 19, 1964)
DESIRES ARE BORN OF GREED. WHEN GREED IS WEAKENED MORE AND MORE,
DISCONTENT DECLINES IN EQUAL MEASURE- BABA
உங்களது பகுத்தறிவை வளர்த்துக் கொண்டு,உங்களது சொந்தத் தேவைகள் மற்றும் ஆசைகளைக் கூட மதிப்பிட்டுப் பாருங்கள். அத்தியாவசியம் என்ற உரைகல்லில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களது இல்லங்களில், பொருட்களைக் குவித்துக் கொள்ளும் போது, இருளையும், தூசியையும் தான் ஊக்குவிக்கிறீர்கள்; அதைப் போலவே, உங்கள் மனதிலும், மிக அதிகமான விஷயங்களை அடுக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கைப் பயணத்தை குறைந்த சுமையுடன் நடத்துங்கள் ! உயிரைக் காத்து, ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எவ்வளவு தேவையோ, அந்த அளவே வைத்துக் கொள்ளுங்கள். பருப்பில், அதன் சுவைக்குத் தேவையான அளவே , உப்பு இருக்க வேண்டும்.அதிகமான உப்பைப் போட்டு, அதன் சுவையை கெடுத்து விடாதீர்கள். அதைப் போலவே, வாழ்க்கையும், அதில் நீங்கள் மிக அதிகமான ஆசைகளை சேர்த்தீர்களானால், தாங்க முடியாமல் போய்விடும். உங்கள் சக்திக்குத் தகுந்த அளவே உங்களது ஆசைகளைக் கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்; அதிலும் கூட நிரந்தர சந்தோஷத்தைத் தருபவற்றை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். ;நவீன நாகரீகம் மற்றும் பிறரது பாராட்டிற்காக அலைந்து, உங்களது வளமைகளை சரி செய்ய முடியாத அளவிற்கு சிரமப் படுத்திக் கொள்ளாதீர்கள். மேலும், உங்களது வாழ்க்கையை சீரமைக்கும் அல்லது நீங்கள் அடைந்துள்ள நிலைக்கான, விதிமுறைகளுக்கு ஏற்றவாறு வாழுங்கள்.
ஆசைகள், பேராசையிலிருந்து தோன்றுகின்றன. பேராசை மேலும் மேலும் வலுவிழக்கும் போது, அதிருப்தியும்
அதே அளவு குறைந்து விடுகிறது - பாபா