azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 10 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 10 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

If you go on a pilgrimage like a picnic, without the mental preparation necessary to receive God’s Grace, your travel is only for sight-seeing, not to strengthen your spiritual inclinations! Your journey is like that of a postal article, collecting impressions on the outer wrapper, not on the core of your inner being. A visually impaired person does not worry about day and night. So too, you cannot differentiate one place from another, if you do not allow the holiness to act on your mind. As a result of pilgrimages, your habits must change for the better; your outlook must widen; your inward look must become deeper and steadier. You must realise the omnipresence of God and the oneness of humanity. You must learn toler ance and patience, charity and service. After your pilgrimage, in your homes, ruminate over all the splendid experiences and be determined to strive for the higher and richer experience of God-realisation. (Divine Discourse, Feb 28, 1964.)
Every living being in this world is knowingly or
unknowingly on a spiritual pilgrimage. - Baba
நீங்கள் ஒரு புனித யாத்திரைக்கு ,இறை அருளைப் பெறுவதற்கான மனப் பக்குவம் இன்றி, ஏதோ , உல்லாசப் பயணம் போலச் சென்றீர்கள் என்றால் , அது வெறும், பொழுது போக்காக இருக்குமே அன்றி உங்களது ஆன்மீக மனப்பாங்கை வலுப் படுத்துவதாக இருக்காது! கண் தெரியாத ஒருவர் பகல் அல்லது இரவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை . அதைப் போலவே, அந்த இடங்களின் புனிதத்துவத்தை நீங்கள் மனதில் பதித்துக் கொள்ளவில்லை என்றால் , உங்களுக்கு ஒரு இடத்திற்கும் , மற்றொரு இடத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. புனித யாத்திரைகளின் பலனாக உங்களது பழக்கங்கள் நல்ல விதமாக மாற வேண்டும்; உங்களது பார்வை விசாலமாக ஆக வேண்டும்; உங்களது உள்ளார்ந்த நோக்கு ஆழமாகவும், நிலையானதாகவும் ஆக வேண்டும். தெய்வம் அங்கிங்கெனாத படி எங்கும் வியாபித்து இருப்பதையும், மனித குலத்தின் ஒருமையையும் நீங்கள் உணர வேண்டும். நீங்கள் சகிப்புத் தன்மை ,பொறுமை,தானம் மற்றும் சேவையைக் கற்றுக் கொள்ள வேண்டும். புனித யாத்திரைக்குப் பிறகு, உங்களது இல்லங்களில்,, நீங்கள் பெற்ற சிறந்த அனுபவங்களை மனதில் அசை போட்டுப் பார்த்து,, ஆத்ம சாக்ஷாத்காரத்தின் உயர்ந்த மற்றும் அற்புதமான அனுபவத்தைப் பெறுவதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த உலகின் ஒவ்வொரு ஜீவ ராசியும், அறிந்தோ, அறியாமலோ ஒரு புனித யாத்திரை தான் செய்து கொண்டு இருக்கிறது -பாபா