azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

You have all the resources you need in yourself. You can tap them by identifying, manifesting and sharing them with others. You are Sath, Chith and Ananda (Being, Awareness, Bliss Absolute); You are Shiva-Shakti Swarupa (form of divine-energy). Do not cultivate the conviction that you are merely human; be assured that you are destined for Divinity. When Divinity takes on the human form as described in the Ramayana, Mahabharata, and Bhagavatha, you must interpret the actions as providing examples and lessons, and not as human stories enacted for entertainment! The five Pandava brothers are five qualities in human character, all observing the norms set by the eldest, who is the noblest and the most righteous. In Ramayana, Lord Rama is a shining example of uncompromising adherence to the principle of righteousness, whatever be the temptation! Rama was charged with love that transcended caste, creed, and even extended to birds and animals. Love is the key to open the doors locked by egoism and greed. [Divine Discourse, April 1973]
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE - BABA
உங்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் உங்கள் வசமே உள்ளன. அவற்றைக் கண்டறிந்து,வெளிப்படுத்தி, பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்த முடியும். நீங்களே சச்சிதானந்தம்; நீங்களே சிவ-சக்தி ஸ்வரூபம். நீங்கள் வெறும் மனிதர் தான் என்ற நம்பிக்கையை வளர விடாதீர்கள்; நீங்கள் தெய்வீகத்தை அடையப் போகிறவர்கள் என்ற உறுதிப் பாட்டுடன் இருங்கள். ஸ்ரீமத் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதத்தில் வர்ணிக்கப் பட்டிருப்பதைப் போல,தெய்வம் மனிதரூபத்தை எடுத்து வரும்போது, அந்தச் செயல்களை,கேளிக்கைக்காக நடிக்கப் பட்ட மனிதக் கதைகளாகக் கருதாது, உதாரணங்களும், போதனைகளும் தருபவைகளாக அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ! மிகச் சீரிய குணம் கொண்டவரும், தலைசிறந்த தர்மாத்மாவுமான அவர்களது மூத்தவர் இட்ட விதிமுறைகளைப் பின்பற்றிய பாண்டவ சகோதரர்கள் ஐவரும், மனித குணாதிசியங்களின் ஐந்து பண்புகள் ஆவர். ஸ்ரீமத் ராமாயணத்தில், பகவான் ஸ்ரீராமர், தூண்டுதல்கள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், தர்மத்தின் கோட்பாடுகளை இம்மி அளவும் பிறழாது பற்றி ஒழுகியதன், ஒரு ஒளிவிடும் உதாரண புருஷராவார் . ஸ்ரீராமர், ஜாதி, குலம் ஆகியவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டு, பறவைகளையும், மிருகங்களையும் கூட உள்ளடக்கிய, ப்ரேமையில் தோய்ந்தவர் ஆவார். ப்ரேமையே, அஹங்காரம் மற்றும் பேராசையினால் பூட்டப்பட்ட கதவுகளைத் திறக்கும் சாவியாகும்.
சாந்தியுள்ள ஒரு மனமே ப்ரேமையின் உறைவிடமாகும்- பாபா