azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 01 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 01 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Find out the difficulties and troubles burdening others and help them to the extent you can to tide over them; and also to lead their lives such that they may not recur. Learn to live with others sharing your joys and sorrows; be forbearing, not overbearing. When you live together in amity, the village will be happy and safe; and when the villages are well-knit and strong, the nation too will be strong and impregnable. Jealousy, anger, hatred and greed will disintegrate a nation and make it fall into disorder and distress. Drive away the divisive forces that keep one away from another, and prevent hearty cooperation and mutual help. Inculcate discipline in the field of Sadhana also and insist on people performing their duty to themselves and to their destiny. Devotion is like the head, duty is the trunk and discipline is the feet. Let devotion be linked with duty and led by discipline; then, success is certain.(Divine Discourse, Mar 16, 1973.)
A nation's well-being or troubles are dependent on the actions of the people.
Actions are related to people's thoughts. - Baba
பிறரைச் சுமையில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்,துன்பங்களையும், துயரங்களையும் கண்டறிந்து, அவர்கள், அவற்றிலிருந்து மீள்வதற்கும், மேலும் அவை மறுபடியும் நிகழாதவாறு வாழ்க்கை நடத்துவதற்கும், உங்களால் இயன்ற வரை, அவர்களுக்கு உதவி புரியுங்கள். பிறருடன் உங்களது சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்; அடக்கத்துடன் இருங்கள்; அகந்தையுடன் இருக்காதீர்கள். நீங்கள், ஒன்றுபட்டு, ஒற்றுமையாக இருந்தால், கிராமம் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்; கிராமங்கள் இணக்கத்துடனும், வலிமையாகவும் இருந்தால், தேசமும் கூட வலிமையுள்ளதாகவும், வெல்ல முடியாததாகவும் இருக்கும். பொறாமை, கோபம், த்வேஷம், மற்றும் பேராசை ஆகியவை, ஒரு நாட்டை சின்னா பின்னமாக்கி , அதை கலவரத்திலும், கலக்கத்திலும் ஆழ்ந்து விடச் செய்யும். ஒருவரை மற்றவரிடமிருந்து பிரித்தும், அவர்களை, இதயபூர்வமான ஒத்துழைப்பும், பரஸ்பர உதவியும் ஆற்ற விடாமல் செய்யும், பிரிவினை சக்திகளை, விரட்டி அடியுங்கள். ஆன்மீக சாதனையிலும், கட்டுப்பாட்டை ஊட்டி, மக்கள் தங்களுக்காகவும், தங்களது குறிக்கோளுக்காகவும் ஆற்ற வேண்டிய கடமைகளை வலியுறுத்துங்கள். பக்தி , தலையைப் போன்றது, கடமை உடலைப் போன்றது, கட்டுப்பாடு பாதங்களைப் போன்றதாகும். பக்தி கடமையுடன் இணைந்து, கட்டுப்பாட்டின் மூலம் வழி நடத்திச் செல்லப் படட்டும் ; பின்னர் வெற்றி நிச்சயம்.
ஒரு தேசத்தின் வளமையோ அல்லது வறுமையோ, அதன் மக்களின் செயல்களைப் பொறுத்து இருக்கும்.
செயல்கள், சிந்தனைகளைப் பொறுத்து இருக்கும் - பாபா