azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The study of texts might remove some wrong notions and induce some right resolutions. But it cannot confer the vision of Reality. Meditation is key to the Atmic treasure which is your real wealth. Your ego always obstructs, even when you meditate. When Sister Nivedita asked for advice from Swami Vivekananda on how to gain one-pointedness during meditation, he said, "Do not allow Margaret Noble to come between you and God!" Margaret Noble was herself. Nivedita means ‘offering’. So Swami Vivekananda advised, "Offer yourself fully to God." This total offering cannot emerge from scholarship. The scholar is polluted by ego; he delights in tabulating pros and cons, raises doubts, disturbs faith and mixes secular and worldly matters with spiritual. Many worship God for worldly gains. Prayers to God must be for spiritual progress. Therefore, cultivate virtues without delay and be free from evil habits, thoughts, words and deeds. Grow in love. This is the way to Ananda (bliss). (Divine Discourse, Jul 27, 1980.)
Remove the roots of the weed of egoism from the field of your heart
- that is enough Sadhana. - Baba
சாஸ்திரங்களைப் படிப்பது, சில தவறான கருத்துக்களை நீக்கி, சரியான சில தீர்மானங்களை உருவாக்கக் கூடும்.ஆனால், அது ஆத்ம சாக்ஷாத்காரத்தை அளிக்க முடியாது. தியானமே,உங்களது அசல் சொத்தான ஆத்ம பொக்கிஷத்தை அடைவதற்குப் பிரதானமாகும். நீங்கள் தியானம் செய்யும் போதும் கூட, உங்களது அஹங்காரம் அதை எப்போதும் தடுக்கும்.சகோதரி நிவேதிதா, தியானத்தின் போது, ஒரே முகமான மனக்குவிப்பைப் பெறுவதற்கான ஆலோசனையை ,சுவாமி விவேகானந்தரிடம் கேட்டபோது, அவர், ‘’மார்க்கரெட் நோபிளை, உனக்கும் தெய்வத்திற்கும் இடையில் வர அனுமதிக்காதே ‘’ என்றாராம். இங்கு ’மார்க்கரெட் நோபிள், நிவேதிதாவே தான். நிவேதிதா என்றால்,’’ அர்ப்பணம்’’ என்றே பொருள்.எனவே தான், சுவாமி விவேகானந்தர், ‘’ உன்னை முழுமையாக தெய்வத்திற்கு அர்ப்பணித்து விடு‘’ என அறிவுறுத்தினார். இந்த முழுமையான அர்ப்பணிப்பு என்பது பாண்டித்யத்திலிருந்து வர முடியாது. மெத்தப் படித்தவர், அஹங்காரத்தினால் மாசடைந்து இருக்கிறார்; அவர், நன்மை, தீமைகளைப் பட்டியலிடுவதிலும், சந்தேகங்களைக் கிளப்புவதிலும், உலகியலானவற்றில், ஆன்மீகத்தை கலந்து குழப்புவதிலும் உவகை கொள்கிறார். பலர் உலகியலான லாபங்களுக்காக இறைவனை வழிபடுகிறார்கள். தெய்வத்தைப் பிராரத்திப்பது, ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே இருக்க வேண்டும். எனவே, எந்த தாமதமும் இன்றி, நற்குணங்களை வளர்த்துக் கொண்டு, தீய பழக்கங்கள், சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் இன்றி இருங்கள். அன்பில் வளருங்கள்.இதுவே, பேரானந்தத்திற்கான வழியாகும்.
உங்கள் இதயம் எனும் நிலத்திலிருந்து, அஹங்காரம் என்ற களையின் வேர்களை நீக்கி விடுங்கள்- இந்த ஆன்மீக சாதனையே போதுமானதாகும் - பாபா