azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Shutting yourself in a room and offering incense and flowers to a picture or image of God, and singing or reciting His glory are very poor substitutes for the discipline that will liberate you from ignorance. All beings are images of God; all men are His pictures; then, why shut yourselves in? All creation is marching on a pilgrimage to Him; why then behave as if you are trekking it alone? You believe that the time spent in church or temple or the domestic shrine in adoration and in ritual worship is devoted to God and the rest is spent for other purposes. But you cannot demarcate and delimit the realms of God and man like that. God is ever with you everywhere. Vasudheva sarvamidham - All this is God. Society is the school where this lesson is taught to those who earnestly seek. (Divine Discourse, Apr 1973)
I WANT EACH ONE OF YOU TO CULTIVATE PURITY, LOVE AND COMPASSION - BABA
அறியாமையிலிருந்து உங்களை விடுவிக்கும் ஆன்மீக சாதனையுடன் ஒப்பிட்டால், நீங்கள், உங்களையே ஒரு அறைக்குள் அடைத்துக் கொண்டு, தெய்வத்தின் ஒரு படம் அல்லது விக்ரஹத்திற்கு அகர்பத்தியும், மலர்களையும் அர்ப்பணிப்பதும், தெய்வத்தின் மாட்சிமையைப் பற்றி பாடுவது அல்லது ஜபிப்பதும், மிக மட்டமான மாற்று முறைகளாகும். அனைவரும் தெய்வ ஸ்வரூபமே ; அனைத்து மனிதர்களும் இறைவனது சித்திரங்களே; பின்னர் உங்களை, நீங்களே ஒரு அறையில் ஏன் அடைத்துக் கொள்ள வேண்டும்? படைப்பனைத்தும் இறைவனை நோக்கி ஒரு தீர்த்த யாத்திரை மேற்கொண்டுள்ளன; பின்னர், நீங்கள் மட்டும் தனியாகச் செல்வது போல ஏன் நடந்து கொள்ள வேண்டும்? ஒரு சர்ச் அல்லது கோவில் அல்லது பூஜை அறையில் ஆராதனை மற்றும் சடங்கு முறையிலான வழிபாட்டில் செலவழிக்கப் படும் நேரமே இறைவனுக்காகவும், மீதி நேரம் மற்ற நோக்கங்களுக்காகவும், பயன்படுத்தப் படுவதாக நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், இறைவன் மற்றும் மனிதனது ஆட்சி எல்லைகளை, இவ்வாறு நீங்கள் வரையறுக்க முடியாது. இறைவன் உங்களுடன், எங்கும், எப்போதும் உள்ளான். வஸூதேவ ஸர்வமிதம்- அனைத்தும் இறைவனே.உளமாற நாடுபவர்களுக்கு இந்தப் பாடத்தை போதிக்கும் பள்ளியே சமுதாயம்.
நீங்கள் ஒவ்வொருவரும், பரிசுத்தம், ப்ரேமை மற்றும் பரிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - பாபா