azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Some Gurus initiate the pupil into a mantra (mystic formula) and advise repetition of the same. But they do not emphasise the innate Divine Reality of the pupil which they cannot ignore even for a moment, nor do they insist on moral regeneration, which is so necessary for clarifying his inner faculties. The mantra-granting Guru is the Deeksha Guru (initiating preceptor); the personality recasting guru is the Siksha Guru (guiding preceptor). It is this latter guru that is reverentially praised in thousands of ways in the holy texts; he removes the faults in vision and destroys the darkness of ignorance. He reveals the Atma to the individual and makes him free. The Guru Purnima is dedicated to such gurus. The Moon (the presiding deity of the mind) is full, clear, cool and bright on this day! It has no blemish or dullness which diminishes its glow. The guru too is pictured and praised today as unblemished, bright and affectionate. On this Guru Poornima, you must decide to master your senses and intellect, emotions and passions, and thoughts and feelings, through intense Sadhana. (Divine Discourse, Jul 27, 1980)
REMEMBER,CRAVING FOR FRUIT WILL RENDER ALL SPIRITUAL DISCIPLINES FRUITLESS- BABA
சில குருமார்கள், சீடர்களுக்கு, ஒரு மந்திர உபதேசம் செய்து ,அதைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்யுமாறு அறிவுறுத்துவார்கள்.ஆனால் அவர்கள், சீடன் ஒரு கணம் கூட உதாசீனப்படுத்த முடியாத இயல்பான தெய்வீகத்தை வலியுறுத்தவோ அல்லது அவன் தனது உள்ளார்ந்த திறன்களைத் தெளிவுபடுத்த மிகவும் தேவையான ஒழுக்க புனரமைப்பை வற்புறுத்தவோ, செய்வதில்லை. மந்திர உபதேசம் செய்யும் குரு தீக்ஷா குரு ஆவார்; குணநலன்களை சீர்படுத்தும் குரு சிக்ஷாகுரு ஆவார்.இந்த இரண்டாவது குருவே, புனித நூல்களில் ஆயிரக்கணக்கான வழிகளில் பயபக்தியுடன் போற்றப் படுகிறார்; இவரே ,ஒருவரது திருஷ்டியில் உள்ள குறைகளை நீக்கி, அறியாமை எனும் இருளை அழிக்கிறார். ஒருவருக்கு ஆத்மாவை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு மோக்ஷத்தை அளிக்கிறார். குரு பூர்ணிமா இத்தகைய குருமார்களுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. இந்நாளில் சந்திரன்(மனதின் அதிபதி), பூரணமாகவும், தெளிவாகவும், குளுமையாகவும், பிரகாசமாகவும் இருக்கிறான் ! பிரகாசத்தைக் குறைக்கும் ஒரு குறையோ அல்லது களங்கமோ அதற்கு இல்லை. குருவும் இந்நாளில் அவ்வாறே சித்தரிக்கப் பட்டு, களங்கமற்றவராகவும், பிரகாசமானவராகவும், பாசமுள்ளவராகவும் போற்றப் படுகிறார்.இந்த குரு பூர்ணிமா தினத்தன்று , நீங்களும், தீவிர ஆன்மீக சாதனையின் மூலம், உங்களது புலன்கள் மற்றும் புத்தி, உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் எழுச்சிகளை, அடக்கி ஆள முடிவு எடுக்க வேண்டும்.
பலன்களுக்காக ஏங்குவது, அனைத்து ஆன்மீக சாதனைகளையும் பலனற்றதாக ஆக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - பாபா