azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

To understand your true nature, you must do three things: Bend the body, mend the senses and end the mind. ‘Bend the body’ is to not allow the ego to develop within you. Perform all duties sincerely with humility. ‘Mend the senses’ requires you to examine how your senses behave; whether they are tending to go astray, and correcting and restraining them appropriately when they do so. ‘End the mind’ requires you to quieten the vagaries of your mind. How? For example, there is a lock and key. When the key is turned towards the left, the lock is locked. If the key is turned to the right, the lock is opened. The key is the same, difference in turning causes locking and unlocking. In you, your heart is the lock and mind is your key. Turn your mind towards God, your heart develops detachment. Turn your mind towards the world, it becomes attached. End the mind, means, turning your mind Godward! (Divine Discourse, May 6, 1988)
WHEN YOU DEDICATE YOUR EVERY ACTION TO THE LORD,YOU WILL RECEIVE ENDURING BLISS AS ITS REWARD - BABA
உங்களது உண்மையான இயல்பைப் புரிந்து கொள்ள நீங்கள் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் : உடலை வளையுங்கள்,புலன்களைத் திருத்துங்கள், மனதை முடியுங்கள். ‘’ உடலை வளையுங்கள்’’ என்றால், உங்களுள் அஹங்காரம் வளர்ந்து விட அனுமதிக்கக் கூடாது என்பதாகும். உங்களது கடமைகள் அனைத்தையும் உளமாற, பணிவுடன் ஆற்றுங்கள். ‘’ புலன்களைத் திருத்துங்கள் ‘’ என்றால், உங்களது புலன்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன, அவை வழி தவறுகின்றனவா என ஆராய்ந்து, அவை அவ்வாறு செய்யும் போது, அவற்றைத் திருத்தி, உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும் .‘’ மனதை முடிப்பது ‘’ என்றால்,உங்கள் மனதின் அலை பாய்ச்சலை, அமைதிப் படுத்த வேண்டும் . எவ்வாறு ? இதோ ஒரு பூட்டும், சாவியும் இருக்கின்றன. சாவியை, இடது பக்கம் திருப்பினால், பூட்டு, பூட்டிக் கொள்கிறது. சாவியை வலது பக்கம் திருப்பினால், பூட்டு திறந்து கொள்கிறது.சாவி ஒன்றேதான்; சாவியைத் திருப்புவதில் உள்ள வித்தியாசத்தினால் தான், பூட்டுவதும், திறப்பதும் நிகழ்கின்றன. உங்களுள், உங்கள் இதயமே பூட்டு, மனமே உங்கள் சாவி. உங்கள் மனதை தெய்வத்தின் பால் திருப்புங்கள், உங்கள் இதயம் பற்றின்மையை வளர்த்துக் கொள்ளும்.உங்கள் மனதை உலகை நோக்கித் திருப்புங்கள், அது பற்றுதல் கொண்டதாக ஆகி விடுகிறது. மனதை முடியுங்கள் என்றால், உங்கள் மனதை தெய்வத்தை நோக்கித் திருப்புவது என்றே பொருள் !
எப்போது உங்களது ஒவ்வொரு செயலையும், நீங்கள் தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்கிறீர்களோ, நிரந்தர பேரானந்தத்தை
நீங்கள் அதற்கான பரிசாகப் பெறுவீர்கள் - பாபா