azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Students, youth, your hearts are tender and unsullied. Develop broadmindedness. From this very moment itself, you must foster pure thoughts. Plant the seed of selfless love in your pure hearts. It will grow and from that tree of love, you will receive the fruits of forbearance, compassion and kindness. Always keep smiling. Face every situation in life, including death, with a smile. Realise that there is nothing greater than truth. Truth is God and righteousness is God’s only ornament. Adhere to these two as the highest attributes in your life. Your words must not be mere words emerging from your lips but from the depth of your heart. There should be complete harmony in your thoughts, words and deeds. I desire that all of you must redeem your lives by concentrating on God, cherishing good thoughts and engaging yourself in the service of your fellow-beings. I bless you all! (Divine Discourse, Jan 19, 1997)
LOVE WILL BE FOSTERED ONLY WHEN NON-VIOLENCE IS PRACTICED - BABA
மாணவர்களே, இளைஞர்களே! உங்களது இதயங்கள் மிருதுவானவை, அப்பழுக்கற்றவை. விசாலமான மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தருணத்திலிருந்தே நீங்கள் தூய எண்ணங்களைப் பேண வேண்டும். தன்னலமற்ற ப்ரேமை எனும் விதையை உங்கள் இதயங்களில் இடுங்கள். அது வளர்ந்து, அந்த ப்ரேமை எனும் மரத்திலிருந்து, நீங்கள் பொறுமை, கருணை மற்றும் பரிவு எனும் கனிகளைப் பெறுவீர்கள்.எப்போதும் புன்முறுவலுடன் இருங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், மரணத்தைக் கூட, ஒரு புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள்.சத்தியத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்பதை உணருங்கள்.சத்தியமே தெய்வம்; தர்மமே , தெய்வத்தின் ஒரே ஆபரணம். இந்த இரண்டையும் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த அம்சங்களாகப் பற்றி ஒழுகுங்கள். உங்களது வார்த்தைகள், வெறும் உதடுகளிலிருந்து வெளிப்படுபவையாக இல்லாமல், இதயத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும்.உங்களது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களில் பரிபூரணமான இசைவு இருக்க வேண்டும்.இறைவன் பால் மனக்குவிப்பு, நல் எண்ணங்களைப் பேணுதல் மற்றும் சக மனிதர்களின் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்களது வாழ்க்கைகளைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அஹிம்ஸையைக் கடைப்பிடித்தால் மட்டுமே
ப்ரேமையைப் பேணிக் காக்க முடியும் - பாபா