azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

We eat food today just as we have been doing all these years. We are looking at the same faces today that we have been seeing all these days. Are we asking ourselves, why do we see the same face again and again? We feed the same stomach which we had fed with food yesterday and the day before. Do we ever question why do we have to feed the same stomach again today? We easily understand and accept these normal tasks, but why do we think and question our traditions and customs and even the act of praying to God every day? Our sacred scriptures and divine stories from the past are to guide and save us. Times may change, the world may change, new epochs may come, but Divinity is one and the same, and is unchanging. Most of you seek things that are ever-changing. Why don’t you seek things that are permanent and unchanging? (Summer Showers in Brindavan, 1977, Ch 1)
YOUR BODY WILL SHINE IF YOUR CHARACTER IS FINE. SERVING FELLOW BEINGS AND WORSHIPPING GOD WILL PRESERVE ITS CHARM- BABA
இந்த அனைத்து வருடங்களில் செய்ததைப் போலவே, இன்றும் நாம் அதே மாதிரி உணவு உண்கிறோம். இந்த அனைத்து நாட்களிலும் நாம் பார்த்துக் கொண்டு இருந்தவர்களின் அதே முகங்களைத்தான் இன்றும் நாம் பார்க்கிறோம். நாம் பார்த்த அதே முகத்தை ஏன் நாம் திரும்பத் திரும்ப பார்க்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோமா? நேற்றும் , அதற்கு முந்தைய நாளும் நாம் எந்த வயிற்றிற்கு உணவு அளித்தோமோ, அதற்குத் தான் நாம் உணவளிக்கிறோம்.அதே வயிற்றிற்கே இன்று நாம் எதற்காக உணவு அளிக்கிறோம் என்று என்றாவது நாம் கேட்டிருக்கிறோமா? இவற்றை நாம் எளிதாகப் புரிந்து கொண்டு, அவற்றை இயல்பான வேலைகள் என்று ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால், நம்முடைய சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை, ஏன் அன்றாடம் தெய்வத்தை வழிபடுவதைக் கூட, நாம் அவற்றை எதற்கு என்று ஏன் கேள்வி கேட்கிறோம் என்று எண்ணிப் பார்த்தீர்களா? நம்முடைய புனிதமான வேதங்களும், தெய்வத்தைப் பற்றிய பண்டையகால கதைகளும், நமக்கு வழிகாட்டி நம்மைக் காப்பதற்காக இருக்கின்றன. காலங்கள் மாறலாம், உலகம் மாறலாம், புதிய சகாப்தங்கள் வரலாம் ஆனால் தெய்வம் ஒன்றே ஒன்று தான் ; அது என்றும் மாறாதது. உங்களில் பலர், எப்போதும் மாறிக் கொண்டு இருப்பவற்றையே நாடுகிறீர்கள். நிரந்தரமான, மாறாதவற்றை ஏன் நீங்கள் நாடக்கூடாது ?
உங்கள் குணநலன்கள் சிறப்பாக இருந்தால், உங்கள் உடலும் ஓளி விட்டுத் திகழும்.சக மனிதர்களுக்கு சேவை செய்வதும், தெய்வ வழிபாடும் அதன் வசீகரத்தைப் பேணிக் காக்கும் - பாபா