azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The third flower that God loves the most is the flower of compassion (daya) towards all living creatures. Live in amity with everyone, but do not have too much connection with people. The fourth special and significant flower that God dearly loves is that of forbearance (Kshama). The Pandavas suffered a lot at the hands of the Kauravas. But never did Dharmaraja lose forbearance. It was the virtue of forbearance that always won for Pandavas the protection of Krishna and made them an ideal to the rest of the world. God loves the offering of ever-blooming flowers of nonviolence, sense-control, compassion and forbearance (ahimsa, indriyanigraha, daya and kshama). God will be pleased with you and confer boons on you only when you offer Him the ‘flowers’ which are dear to Him. No benefit accrues from offering flowers, which fade and decay everyday. (Divine Discourse, Aug 22, 2000).
A REAL HUMAN BEING ALWAYS SHINES WITH THE QUALITIES OF CALMNESS,
FORBEARANCE AND COMPASSION - BABA
தெய்வம் மிகவும் விரும்பும் மூன்றாவது புஷ்பம், அனைத்து ஜீவராசிகளிடமும் காட்டப்படும் தயை எனும் புஷ்பமே.அனைவருடனும் நட்பு உணர்வோடு வாழுங்கள்; ஆனால் மனிதர்களுடன் அளவுக்கு மீறிய உறவை வைத்துக் கொள்ளாதீர்கள்.தெய்வம் மிகவும் விரும்பும் தனிச்சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த நான்காவது புஷ்பம், பொறுமை ( க்ஷமா) எனும் புஷ்பமாகும். பாண்டவர்கள், கௌரவர்களால் மிகவும் துன்புறுத்தப் பட்டார்கள்.ஆனால், தர்மராஜர் ஒருபோதும் பொறுமையை இழக்கவில்லை.இந்தப் பொறுமை எனும் நற்குணமே, பாண்டவர்களுக்கு, எப்போதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பாதுகாவலைப் பெற்றுத் தந்து, அவர்களை உலகத்தில் பிறர்க்கு எல்லாம் ஒரு இலட்சிய மனிதர்களாக ஆக்கியது. இறைவன், என்றும் மலரும் புஷ்பங்களான அஹிம்ஸை, புலனடக்கம், கருணை, மற்றும் பொறுமை ( அஹிம்ஸா, இந்திரிய நிக்ரஹா, தயா மற்றும் க்ஷமா ) ஆகியவற்றின் அர்ப்பணிப்பை மிகவும் விரும்புகிறான். அவருக்குப் பிடித்த புஷ்பங்களை நீங்கள் அர்ப்பணித்தால் மட்டும் தான், இறைவன் உங்களிடம் மகிழ்ச்சி அடைந்து, உங்களுக்கு வரங்களை அளித்திடுவான்.தினமும் வாடி, வதங்கும் மலர்களை சமர்ப்பிப்பதால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை.
ஒரு உண்மையான மனிதன்,அமைதி,பொறுமை மற்றும்
கருணை என்ற குணங்களால் எப்போதும் பிரகாசிக்கிறான் - பாபா